• Sep 08 2024

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர்! வெளியானது புது அப்டேட்!

crownson / Dec 27th 2022, 9:26 am
image

Advertisement

வங்கதேச தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளது.

டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது.

இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.

வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2 டெஸ்டிலும் வெற்றியைத் தேடித் தந்தனர்.

இதையடுத்து இலங்கை அணியுடனான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி பங்கேற்கவுள்ளது.

அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி ஜனவரி 3ஆம் திதி மும்பையிலும்,  இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் திதி புனேவிலும் கடைசி T20 ஜனவரி 7ஆம் திதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது.

இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் திதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் திதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் திதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுலுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.

இதேபோன்று T20 இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச சுற்றுப் பயணத்தில் காயம் காரணமாக இடம்பெறாத பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இவ்விரு வீரர்களும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அந்த வகையில் இலங்கை  தொடருக்கு  எதிரான இந்திய அணியின் அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த தொடரை பார்க்கலாம்.

இதேபோன்று DD ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்தியா – இலங்கை தொடரை பார்த்து மகிழலாம்.

T20 போட்டியில் இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில் இந்தியா 17 முறையும், இலங்கை 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு போட்டி முடிவு எடுக்கப்படவில்லை.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் இரு அணிகளும் 162 முறை விளையாடியுள்ளன.

இதில் இந்தியா 93 முறையும், இலங்கை 57 தடவையும் வெற்றி பெற்றுள்ளன.

11 ஆட்டங்களில் முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் வெளியானது புது அப்டேட் வங்கதேச தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளது.டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 2 டெஸ்டிலும் வெற்றியைத் தேடித் தந்தனர். இதையடுத்து இலங்கை அணியுடனான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியஅணி பங்கேற்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 3ஆம் திகதி மும்பையிலும்,  இரண்டாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 5 ஆம் திகதி புனேவிலும் கடைசி T20 ஜனவரி 7ஆம் திகதி ராஜ்கோட் சவுராஷ்டிரா மைதானத்திலும் நடைபெறுகிறது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி ஜனவரி 10ஆம் திகதி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜனவரி 12ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 3ஆவது போட்டி ஜனவரி 15 ஆம் திகதி திருவனந்தபுரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுலுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.இதேபோன்று T20 இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச சுற்றுப் பயணத்தில் காயம் காரணமாக இடம்பெறாத பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் இவ்விரு வீரர்களும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. அந்த வகையில் இலங்கை  தொடருக்கு  எதிரான இந்திய அணியின் அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த தொடரை பார்க்கலாம். இதேபோன்று DD ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்தியா – இலங்கை தொடரை பார்த்து மகிழலாம்.T20 போட்டியில் இரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளன.இதில் இந்தியா 17 முறையும், இலங்கை 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு எடுக்கப்படவில்லை.ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் இரு அணிகளும் 162 முறை விளையாடியுள்ளன. இதில் இந்தியா 93 முறையும், இலங்கை 57 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 11 ஆட்டங்களில் முடிவு எடுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement