இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மோசமான அம்சங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள மனித உரிமைகள்சார் அமைப்புக்கள் கருசனை கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் சற்று காலை பின்னோக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் பின்னடிக்கின்றது என நினைத்து அதற்கு எதிரான அழுத்தங்களை வழங்காது அனைவரும் செயற்படமுடியாதென்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் என நீதியமைச்சர் தெரிவிப்பதாகவும் ஆனால் கட்டாயம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் பழைய சட்டத்தை விடவும் மோசமானதாக உள்ளதால் இதனை தடுப்பதே முதலாவது நடடிவக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் சீனாவை காட்டி இந்தியாவை தொடர்ந்தும் பயமுறுத்த முடியாது என்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன் என்பதும் இந்தியவின் பாதுகாப்பில் தாக்கம் செலுத்துகின்ற நிலையில் தொடர்ந்து இலங்கையால் இவ்வாறு செய்யமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, ரேடார் தளத்தை இலங்கையில் அமைப்பது தொடர்பாக சீனா பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகமொன்று வெளியிட்ட செய்தி தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சீனாவை காட்டி இந்தியாவை தொடர்ந்தும் பயமுறுத்த முடியாது – பின்வாங்கிய ரணில் - சுட்டிக்காட்டிய எம்.பி samugammedia இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மோசமான அம்சங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள மனித உரிமைகள்சார் அமைப்புக்கள் கருசனை கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் சற்று காலை பின்னோக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.எனினும் அரசாங்கம் பின்னடிக்கின்றது என நினைத்து அதற்கு எதிரான அழுத்தங்களை வழங்காது அனைவரும் செயற்படமுடியாதென்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.புதிய சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் என நீதியமைச்சர் தெரிவிப்பதாகவும் ஆனால் கட்டாயம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.புதிய சட்டம் பழைய சட்டத்தை விடவும் மோசமானதாக உள்ளதால் இதனை தடுப்பதே முதலாவது நடடிவக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இலங்கை அரசாங்கம் சீனாவை காட்டி இந்தியாவை தொடர்ந்தும் பயமுறுத்த முடியாது என்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன் என்பதும் இந்தியவின் பாதுகாப்பில் தாக்கம் செலுத்துகின்ற நிலையில் தொடர்ந்து இலங்கையால் இவ்வாறு செய்யமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, ரேடார் தளத்தை இலங்கையில் அமைப்பது தொடர்பாக சீனா பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகமொன்று வெளியிட்ட செய்தி தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.