• Nov 23 2024

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பின்னடவை சந்தித்துள்ள இந்தியா..!samugammedia

mathuri / Dec 29th 2023, 10:32 pm
image

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை  நடைபெற்று வரும்  3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா,மேற்கிந்திய அணிகள், இங்கிலாந்து , இலங்கை உட்பட 9 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடரில் நடைபெறும் மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில்  3 உள்நாட்டு தொடர், 3 வெளிநாட்டு தொடர் என ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.

இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் நுழைய தகுதி பெறும். இந்த நிலையில், 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இறுதிவரை சென்ற இந்திய அணியால் இறுதி கோப்பையை வெல்ல முடியவில்லை.

தற்போது இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சென்றுள்ளது.  இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓவர்கள் வீச இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாக மேலும் 2 புள்ளிளை ஐசிசி குறைத்துள்ளது.


தற்போதைய நிலவரபடி தென்னாபிரிக்க அணி முதல் இடத்திலும்,நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் பங்களாதேஷ் அணி 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும்,இந்திய அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. மேற்கிந்திய அணிகள் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து எட்டாவது இடத்திலும், இலங்கை அணி 9 இடத்திலும் உள்ளது.

இந்த புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்படும் ஏற்பட கூடும் என்பதோடு கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பின்னடவை சந்தித்துள்ள இந்தியா.samugammedia 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை  நடைபெற்று வரும்  3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா,மேற்கிந்திய அணிகள், இங்கிலாந்து , இலங்கை உட்பட 9 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன.இத்தொடரில் நடைபெறும் மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில்  3 உள்நாட்டு தொடர், 3 வெளிநாட்டு தொடர் என ஒவ்வொரு அணியும் தலா 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் நுழைய தகுதி பெறும். இந்த நிலையில், 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இறுதிவரை சென்ற இந்திய அணியால் இறுதி கோப்பையை வெல்ல முடியவில்லை.தற்போது இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சென்றுள்ளது.  இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓவர்கள் வீச இந்தியா அதிக நேரம் எடுத்துக் கொண்டதன் காரணமாக மேலும் 2 புள்ளிளை ஐசிசி குறைத்துள்ளது.தற்போதைய நிலவரபடி தென்னாபிரிக்க அணி முதல் இடத்திலும்,நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும் பங்களாதேஷ் அணி 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும்,இந்திய அணி ஆறாவது இடத்திலும் உள்ளது. மேற்கிந்திய அணிகள் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து எட்டாவது இடத்திலும், இலங்கை அணி 9 இடத்திலும் உள்ளது.இந்த புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்படும் ஏற்பட கூடும் என்பதோடு கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement