• May 01 2024

இலங்கைக்கு முக்கிய நேரத்தில் கைகொடுத்த இந்தியா

harsha / Dec 18th 2022, 8:03 pm
image

Advertisement

இந்தியா கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த 370 வகையான மருந்துகளும் அடுத்த மாதம் இலங்கையில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான 14 மருந்துகளில் ஏழு மருந்துகளை ஒரு வருட காலத்திற்கு மானியமாக வழங்க சீனா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருந்துகள் தொடர்பில் சில சிரமங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், மருந்துப் பிரச்சினை இன்னும் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் தொடர்பில் எந்தத் தகவலும் மறைக்கப்பட மாட்டாது எனவும் அனைத்துத் தகவல்களும் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு தேவையான மருந்துகளின் பட்டியல் ஏற்கனவே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு முக்கிய நேரத்தில் கைகொடுத்த இந்தியா இந்தியா கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த 370 வகையான மருந்துகளும் அடுத்த மாதம் இலங்கையில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான 14 மருந்துகளில் ஏழு மருந்துகளை ஒரு வருட காலத்திற்கு மானியமாக வழங்க சீனா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மருந்துகள் தொடர்பில் சில சிரமங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், மருந்துப் பிரச்சினை இன்னும் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், போதைப்பொருள் தொடர்பில் எந்தத் தகவலும் மறைக்கப்பட மாட்டாது எனவும் அனைத்துத் தகவல்களும் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  ரம்புக்வெல்ல தெரிவித்தார்.இதேவேளை, இலங்கைக்கு தேவையான மருந்துகளின் பட்டியல் ஏற்கனவே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement