திடீர் திடீரென செத்து வீழந்த காகங்கள்; வரப்போகும் கடும் ஆபத்துக்கான அறிகுறியா?

277

திடீர் திடீரென காகங்கள் செத்து வீழ்ந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு பகுதியிலுள்ள குளத்துமேடு என்ற இடத்தில் நான்கு காகங்கள் திடீரென செத்து வீழ்ந்தன.

இதனைக்கண்டதும் பறவைக்காய்ச்சல் பரவலாம் என்ற பீதி மக்களிடையே பரவியது. இதனையடுத்து செத்து வீழ்னத நான்கு காகங்களினதும் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறுகின்றார்.

பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதும் காகங்கள் இறந்தமைக்கான காரணம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: