பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (6) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார். காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
லொறி மீது வேன் மோதி கோர விபத்து- இந்தியர் ஒருவர் பலி- 8 பேர் படுகாயம் பொலன்னறுவை ஜயந்திபுர 23 ஆம் தூண் பகுதியில் வேனும் லொறியும் மோதியதில் இடம்பெற்ற கார் விபத்தில் இந்திய பிரஜைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று (6) இரவு இடம்பெற்றுள்ளது.பொலன்னறுவையில் இருந்து மின்னேரியா நோக்கி பயணித்த வேன், அரிசி ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் உட்பட இந்தியப் பிரஜைகள் இந்நாட்டில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிய வந்தவர்கள் எனவும், அவர்கள் தங்குமிடத்திற்குச் செல்லும் போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.வேகமாக வந்த வேன் லொறியின் பின்புறம் மோதியதில் சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த இந்தியர் உயிரிழந்தார். காயமடைந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.தற்போது சாரதி உட்பட அனைவரும் படுகாயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.லொறி மற்றும் சாரதி பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (7) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.