• Sep 08 2024

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி!

Sharmi / Jan 26th 2023, 12:48 pm
image

Advertisement

இந்தியாவின் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி இன்று ஏற்றப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

74வது குடியரசு தினம் இந்தியா நாட்டின் 74வது குடியரசு தினம் இந்தியா முழுவது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இதேபோல் சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.   

இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை,ஆராதனை செய்யப்பட்டது.

பின்னர்இ பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடியை வைத்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றி வைத்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி இந்தியாவின் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி இன்று ஏற்றப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,74வது குடியரசு தினம் இந்தியா நாட்டின் 74வது குடியரசு தினம் இந்தியா முழுவது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாநிலங்களில் தலைநகர்களிலும் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். இதேபோல் சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.   இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை,ஆராதனை செய்யப்பட்டது.பின்னர்இ பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடியை வைத்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றி வைத்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Advertisement

Advertisement

Advertisement