• Apr 28 2024

ஏதிலியான இலங்கை தந்தைக்கு பிறந்த மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு! சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு samugammedia

Chithra / Apr 6th 2023, 9:06 am
image

Advertisement

இலங்கை ஏதிலியான தந்தையின் மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்க சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையரான சகாயநாதன் 1990 ஆம் ஆண்டில் ஏதிலியாக இந்தியா சென்றார்.

அவர் சிவகங்கை - சென்னாலக்குடி அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்ற மேரி கிறிஸ்டினாவை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 2002 ஜனவரி 18 ஆம் ஆண்டு நியாடிட்டஸ் என்ற மகன் பிறந்தார்.

தற்போது பட்டதாரியான அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடவுச்சீட்டு கோரி மதுரை கடவுச்சீட்டு அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், அவரின் பிறப்புச் சான்றிதழில் இலங்கை அகதி என குறிப்பிட்டிருந்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில், அகதி என்று குறிப்பிடப்பட்டுள்ளமை ரத்து செய்து கடவுச்சீட்டு வழங்க உத்தரவிடக்கோரி நியாடிட்டஸ் சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்திய குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2004 டிசம்பர் 3 ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது.

குறித்த சட்டம், 1987 ஆம் ஆண்டு ஜூலை முதலாம்  திகதி அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபரும் அல்லது குடியுரிமை (திருத்தம்) சட்டம்  அமுலாவதற்கு முன்னர், ஒருவர் பிறக்கும்போது அவரது பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருப்பாராயின் அவர் பிறப்பால் இந்தியர் எனக் கூறுகிறது.

மனுதாரரின் தாய் ஒரு இந்திய பிரஜை.எனவே, குடியுரிமை சட்டப்படி மனுதாரர் தகுதியை பூர்த்தி செய்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு, விண்ணப்பத்தை 3 வாரங்களில் பரிசீலித்து கடவுச்சீட்டு வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.


ஏதிலியான இலங்கை தந்தைக்கு பிறந்த மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு samugammedia இலங்கை ஏதிலியான தந்தையின் மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்க சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.இலங்கையரான சகாயநாதன் 1990 ஆம் ஆண்டில் ஏதிலியாக இந்தியா சென்றார்.அவர் சிவகங்கை - சென்னாலக்குடி அகதிகள் முகாமில் வசித்து வந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்ற மேரி கிறிஸ்டினாவை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.இவர்களுக்கு 2002 ஜனவரி 18 ஆம் ஆண்டு நியாடிட்டஸ் என்ற மகன் பிறந்தார்.தற்போது பட்டதாரியான அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடவுச்சீட்டு கோரி மதுரை கடவுச்சீட்டு அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தார்.எனினும், அவரின் பிறப்புச் சான்றிதழில் இலங்கை அகதி என குறிப்பிட்டிருந்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.இந்தநிலையில், அகதி என்று குறிப்பிடப்பட்டுள்ளமை ரத்து செய்து கடவுச்சீட்டு வழங்க உத்தரவிடக்கோரி நியாடிட்டஸ் சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு செய்தார்.இந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்திய குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2004 டிசம்பர் 3 ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது.குறித்த சட்டம், 1987 ஆம் ஆண்டு ஜூலை முதலாம்  திகதி அல்லது அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபரும் அல்லது குடியுரிமை (திருத்தம்) சட்டம்  அமுலாவதற்கு முன்னர், ஒருவர் பிறக்கும்போது அவரது பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருப்பாராயின் அவர் பிறப்பால் இந்தியர் எனக் கூறுகிறது.மனுதாரரின் தாய் ஒரு இந்திய பிரஜை.எனவே, குடியுரிமை சட்டப்படி மனுதாரர் தகுதியை பூர்த்தி செய்துள்ளார்.இதனை கருத்திற்கொண்டு, விண்ணப்பத்தை 3 வாரங்களில் பரிசீலித்து கடவுச்சீட்டு வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement