• May 18 2024

இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்பம் கோரல்! SamugamMedia

Chithra / Feb 28th 2023, 5:37 pm
image

Advertisement

இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் சார்பில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் வழங்கப்படும் இந்த திட்டத்தில் நேரு நினைவு புலமைப்பரிசில், மௌலானா அசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட 03 திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

இதன்மூலம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனித வள /சமூக விஞ்ஞானம் மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் கலாநிதி பட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் இலங்கை மாணவர்களுக்கு கிட்டியுள்ளது.


இலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்பம் கோரல் SamugamMedia இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 – 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்திய அரசின் சார்பில் கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் வழங்கப்படும் இந்த திட்டத்தில் நேரு நினைவு புலமைப்பரிசில், மௌலானா அசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட 03 திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.இதன்மூலம், பொறியியல், விஞ்ஞானம், வணிகம், பொருளாதாரம், வர்த்தகம், மனித வள /சமூக விஞ்ஞானம் மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் கலாநிதி பட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் இலங்கை மாணவர்களுக்கு கிட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement