• Jul 06 2024

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம்; தாயின் கர்ப்பப்பை அகற்றல்: நடவடிக்கை எடுக்க முடியாதா? கணவனின் கண்ணீர் கோரிக்கை! samugammedia

Chithra / Jul 26th 2023, 8:58 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் குழந்தை உயிரிழந்ததுடன், தாயாரின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், வைத்தியர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென கணவன் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த சம்பவம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தினார்.

மேலும் தெரிவிக்கையில், 

தனது குழந்தை இறந்ததுடன், மனைவியின் கர்ப்பப்பை நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ள நிலையில், வைத்தியர்கள் இழைத்த தவறுக்கு தண்டனையில்லையா? பாதிக்கப்பட்ட தமக்கு யார் நீதி வழங்குவது என கண்ணீருடன் கேள்வியெழுப்பினார்.

சுகாதார அமைச்சரே இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் நேற்று (25) முறைப்பாடு பதிவு செய்தார்.

விசுவமடு, புன்னைநீராவியை சேர்ந்த இராசதுரை சுரேஸ் என்பவரே முறைப்பாட்டை மேற்கொண்டார்.


கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம்; தாயின் கர்ப்பப்பை அகற்றல்: நடவடிக்கை எடுக்க முடியாதா கணவனின் கண்ணீர் கோரிக்கை samugammedia கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் குழந்தை உயிரிழந்ததுடன், தாயாரின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், வைத்தியர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டுமென கணவன் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.யாழ் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த சம்பவம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தினார்.மேலும் தெரிவிக்கையில், தனது குழந்தை இறந்ததுடன், மனைவியின் கர்ப்பப்பை நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ள நிலையில், வைத்தியர்கள் இழைத்த தவறுக்கு தண்டனையில்லையா பாதிக்கப்பட்ட தமக்கு யார் நீதி வழங்குவது என கண்ணீருடன் கேள்வியெழுப்பினார்.சுகாதார அமைச்சரே இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் நேற்று (25) முறைப்பாடு பதிவு செய்தார்.விசுவமடு, புன்னைநீராவியை சேர்ந்த இராசதுரை சுரேஸ் என்பவரே முறைப்பாட்டை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement