முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டார்.
அவர் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்று, அவரால் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.
இதன்படியே, அவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார்.
நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மேர்வின் சில்வாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவரின் மனைவி வெளியிட்ட தகவல். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இதுவரை எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டார்.அவர் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்று, அவரால் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.இதன்படியே, அவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார்.நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.இதேவேளை மேர்வின் சில்வாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.