சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை; விராட் கோலி தொடர்ந்தும் 5 ஆம் இடத்தில்

138

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5 ஆவது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6 ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

ஜூன் 1 ஆம் திகதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது.

6 ஆவது இடத்தைப் பெற்றுள்ள பந்த் மற்றும் ரோகித் தலா 747 மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2 ஆவது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.

அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2 ஆவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஆவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் டெஸ்ட் அறிமுக வீரர் டேவன் கான்வே டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 447 புள்ளிகளுடன் 77 ஆவது இடத்தில் நுழைந்துள்ளார்.

நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 895 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

சமூக ஊடகங்களில்: