• Jan 11 2025

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக்குறிப்பு அறிமுகம்

Tharmini / Jan 8th 2025, 11:47 am
image

நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் சுமார் 15000 ற்கும் மேற்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பொது நிர்வாக உள்நாட்டு அலுவலக அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக்க பண்டாரவுக்கும் இடையில் நேற்று (07) பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பது சம்மந்தமாக இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன் அது விடயமாக உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

மேலும், இது விடயமாக கடந்த வாரம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேரடியாக சந்தித்து  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிராமணக் குறிப்பு உருவாக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடனான சந்திப்பையடுத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிராமணக் குறிப்பு சம்மந்தமான நோக்கங்கள்,அதன் முக்கியத்துவங்கள் பற்றி தொழிற்சங்க பிரதிநிதிகளினால் ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இது விடயமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை தெளிவுபடுத்த எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க தலைவர் கபீர் கலீல் தெரிவித்திருந்தார்.


பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்ளுக்கு தனியான சேவைப் பிராமணக்குறிப்பு அறிமுகம் நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் சுமார் 15000 ற்கும் மேற்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,பொது நிர்வாக உள்நாட்டு அலுவலக அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக்க பண்டாரவுக்கும் இடையில் நேற்று (07) பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிரமாணக் குறிப்பு தயாரிப்பது சம்மந்தமாக இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன் அது விடயமாக உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.மேலும், இது விடயமாக கடந்த வாரம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேரடியாக சந்தித்து  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிராமணக் குறிப்பு உருவாக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருடனான சந்திப்பையடுத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கென தனியான சேவைப் பிராமணக் குறிப்பு சம்மந்தமான நோக்கங்கள்,அதன் முக்கியத்துவங்கள் பற்றி தொழிற்சங்க பிரதிநிதிகளினால் ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இது விடயமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஒருங்கிணைத்து அவர்களை தெளிவுபடுத்த எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க தலைவர் கபீர் கலீல் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement