• Nov 26 2025

கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை அறிமுகம்

Chithra / Nov 25th 2025, 11:56 am
image

 

இலங்கை காவல்துறை, குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக முறைப்பாடளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் தகவல் முறை என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

இந்த அமைப்பின் மூலம் ஒரு நபர் இதற்கு முன் ஏதேனும் குற்றத்திற்காக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் உடனடியாக பரிசோதிக்க முடியும். 

 

இந்தத் தகவல் முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அணுகக் கூடியதாக உள்ளது. 

 

சந்தேகநபரின் விபரங்களை இதில் உள்ளிடும்போது, முந்தைய முறைப்பாடுகள் எதுவும் இல்லையெனில், அவர்களை உடனடியாக விடுவிக்க இந்த முறை வழி செய்கிறது. 

 

அத்துடன் நீதிமன்ற அழைப்பாணைகளை வேண்டுமென்றே தவிர்ப்பவர்களை இது அடையாளம் காண உதவுகிறது. 

 

உதாரணமாக, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறியிருந்தால், அவர் AMIS மூலம் அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்யலாம் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் தகவல் முறைமை அறிமுகம்  இலங்கை காவல்துறை, குற்றவியல் அல்லது போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காக முறைப்பாடளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் தகவல் முறை என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த அமைப்பின் மூலம் ஒரு நபர் இதற்கு முன் ஏதேனும் குற்றத்திற்காக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளாரா என்பதை அதிகாரிகள் உடனடியாக பரிசோதிக்க முடியும்.  இந்தத் தகவல் முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அணுகக் கூடியதாக உள்ளது.  சந்தேகநபரின் விபரங்களை இதில் உள்ளிடும்போது, முந்தைய முறைப்பாடுகள் எதுவும் இல்லையெனில், அவர்களை உடனடியாக விடுவிக்க இந்த முறை வழி செய்கிறது.  அத்துடன் நீதிமன்ற அழைப்பாணைகளை வேண்டுமென்றே தவிர்ப்பவர்களை இது அடையாளம் காண உதவுகிறது.  உதாரணமாக, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறியிருந்தால், அவர் AMIS மூலம் அடையாளம் கண்டு உடனடியாகக் கைது செய்யலாம் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement