• May 18 2024

கைதிகளை விடுதலை செய்வதற்கு பொறிமுறை அறிமுகம்! - நீதி அமைச்சர்

Chithra / Dec 5th 2022, 5:01 pm
image

Advertisement

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள், வயதான கைதிகள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்று விடுதலை செய்வதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து கைதிகளையும் பரிசோதிக்க ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் மேலும் ஐந்து குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்று விசேட வைத்தியர்களைக் கொண்ட இன்னுமொரு குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக இருக்கும் என்றும், விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளைப் பரிந்துரைக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பல்வேறு காரணங்களால் ஏராளமான கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.

கைதிகளை விடுதலை செய்வதற்கு பொறிமுறை அறிமுகம் - நீதி அமைச்சர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள், வயதான கைதிகள் மற்றும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்று விடுதலை செய்வதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள அனைத்து கைதிகளையும் பரிசோதிக்க ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் மேலும் ஐந்து குழுக்கள் நியமிக்கப்படும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மூன்று விசேட வைத்தியர்களைக் கொண்ட இன்னுமொரு குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக இருக்கும் என்றும், விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளைப் பரிந்துரைக்க இந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.பல்வேறு காரணங்களால் ஏராளமான கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement