• Nov 23 2024

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு அறிமுகம் - மனுஷ நாணயக்கார தெரிவிப்பு..!samigammedia

Tharun / Jan 16th 2024, 6:17 pm
image

இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட "கரு சரு" திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக இடைக்காலத் துறை வழிநடத்தல் குழு இன்று (16) ஸ்தாபிக்கப்பட்டது. .

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தலைமையில் துறைசார் குழுக்களை அமைப்பது தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரியும் அனைவரையும் பதிவு செய்து தரவு அமைப்பு ஒன்றை தயாரிப்பது தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை பரிசீலித்து, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழில்சார் அமைப்பு இணையத்தின் ஊடாக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பயண நேரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு அறிமுகம் - மனுஷ நாணயக்கார தெரிவிப்பு.samigammedia இலங்கையில் முறைசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட "கரு சரு" திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக இடைக்காலத் துறை வழிநடத்தல் குழு இன்று (16) ஸ்தாபிக்கப்பட்டது. .தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தலைமையில் துறைசார் குழுக்களை அமைப்பது தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக பணிபுரியும் அனைவரையும் பதிவு செய்து தரவு அமைப்பு ஒன்றை தயாரிப்பது தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை பரிசீலித்து, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழில்சார் அமைப்பு இணையத்தின் ஊடாக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பயண நேரத்தை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement