தென் கொரியாவுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பியதாகக் கூறப்படும் E-8 விசா ஊழல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட பல்வேறு துறைகளில் முன்னைய நிர்வாகங்கள் இழைத்த பிழைகளை நிவர்த்தி செய்வதே புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை எனவும், அதற்கான திருத்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
நேற்று (18) சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை கொண்டாடும் வகையில் Voice of Migrant Network (VoM) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
E-8 விசா ஊழல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது : குற்றப்புலனாய்வு திணைக்களம் தென் கொரியாவுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பியதாகக் கூறப்படும் E-8 விசா ஊழல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட பல்வேறு துறைகளில் முன்னைய நிர்வாகங்கள் இழைத்த பிழைகளை நிவர்த்தி செய்வதே புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை எனவும், அதற்கான திருத்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார். நேற்று (18) சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை கொண்டாடும் வகையில் Voice of Migrant Network (VoM) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.