• May 18 2024

பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் முறைகேடுகள் - நாளை மறுதினம் முதல் விசேட சுற்றிவளைப்பு samugammedia

Chithra / Nov 28th 2023, 10:52 am
image

Advertisement

 

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் சீனியை, சதொச மற்றும் சிறப்பங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்துவருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 25 சதம் வரியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனி அரசாங்கம் கையகப்படுத்தி 275 ரூபாய் என்ற சில்லறை விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தைக்கு விநியோகிக்காமல் வைக்கப்பட்டிருந்த குறித்த 2ஆயிரம் மெட்ரிக் டன் சீனி கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகவும், தட்டுப்பாடு இன்றி பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்த விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் முறைகேடுகள் - நாளை மறுதினம் முதல் விசேட சுற்றிவளைப்பு samugammedia  அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள 2,000 மெட்ரிக் டன் சீனியை, சதொச மற்றும் சிறப்பங்காடிகள் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்துவருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 25 சதம் வரியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனி அரசாங்கம் கையகப்படுத்தி 275 ரூபாய் என்ற சில்லறை விலையில் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தார்.இதன்படி, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தைக்கு விநியோகிக்காமல் வைக்கப்பட்டிருந்த குறித்த 2ஆயிரம் மெட்ரிக் டன் சீனி கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை, பண்டிகைக் காலங்களில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகவும், தட்டுப்பாடு இன்றி பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்த விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement