• May 18 2024

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதா? ஹர்ஷ விளக்கம் SamugamMedia

Chithra / Mar 5th 2023, 9:52 am
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு தற்போது அவசியமானதாக இருந்தாலும், உண்மையில் அது தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

இது தொடர்பிலாம கருத்துக்களை  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய சவாலானது வளர்ச்சியை உருவாக்குவதாகும்.

இந்நிலையில் தேவைகள் மோசமடைந்து வரும் நிலையில், இழக்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

எனவே தேவையான வளர்ச்சியை உருவாக்க, உள்நாட்டில் இயங்கும் வர்த்தகம் அல்லாத வளர்ச்சி இனி போதுமானதாக இருக்காது.

இதற்காக சுவர்களை தகர்த்து உலகிற்கு பாலங்கள் கட்ட வேண்டும்.


இந்த நிலையில் சீர்திருத்தங்கள் இல்லாமல் உள்நாட்டு தீர்வு உள்ளது என்று மேடைகளில் கூறுவது சாத்தியமற்ற அம்சமாகும் என்றும் ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதா ஹர்ஷ விளக்கம் SamugamMedia சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு தற்போது அவசியமானதாக இருந்தாலும், உண்மையில் அது தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.இது தொடர்பிலாம கருத்துக்களை  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய சவாலானது வளர்ச்சியை உருவாக்குவதாகும்.இந்நிலையில் தேவைகள் மோசமடைந்து வரும் நிலையில், இழக்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.எனவே தேவையான வளர்ச்சியை உருவாக்க, உள்நாட்டில் இயங்கும் வர்த்தகம் அல்லாத வளர்ச்சி இனி போதுமானதாக இருக்காது.இதற்காக சுவர்களை தகர்த்து உலகிற்கு பாலங்கள் கட்ட வேண்டும்.இந்த நிலையில் சீர்திருத்தங்கள் இல்லாமல் உள்நாட்டு தீர்வு உள்ளது என்று மேடைகளில் கூறுவது சாத்தியமற்ற அம்சமாகும் என்றும் ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement