• Oct 19 2024

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடா..? விலை தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Nov 13th 2023, 8:53 am
image

Advertisement

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடா..? விலை தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

 

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில நாட்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனிக்கான வரி அதிகரிப்பதற்கு முன்னதாக, 25 சதத்தை வரியாக செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ள 45 ஆயிரம் மெற்றிக் டன் சீனி கையிருப்புகள் தற்போது களஞ்சியசாலைகளில் உள்ளன.

சீனி இறக்குமதியாளர்களுடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின்போது, குறித்த சீனி கையிருப்பை 275 ரூபாவுக்கு மேற்படாமல் விற்பனை செய்யும் வகையில் சில்லறை வர்த்தகர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, குறைந்த விலையில் சீனியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீனி கையிருப்புகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இடங்களை சோதனையிட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, 275 ரூபாவுக்கு மேற்படாத வகையில் சீனியை விற்பனை செய்யுமாறு சில்லறை விற்பனையாளர்களை கோருவதாகவும்,

அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் களஞ்சியசாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடா. விலை தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடா. விலை தொடர்பில் வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில நாட்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சீனிக்கான வரி அதிகரிப்பதற்கு முன்னதாக, 25 சதத்தை வரியாக செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ள 45 ஆயிரம் மெற்றிக் டன் சீனி கையிருப்புகள் தற்போது களஞ்சியசாலைகளில் உள்ளன.சீனி இறக்குமதியாளர்களுடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின்போது, குறித்த சீனி கையிருப்பை 275 ரூபாவுக்கு மேற்படாமல் விற்பனை செய்யும் வகையில் சில்லறை வர்த்தகர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, குறைந்த விலையில் சீனியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், சீனி கையிருப்புகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இடங்களை சோதனையிட நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, 275 ரூபாவுக்கு மேற்படாத வகையில் சீனியை விற்பனை செய்யுமாறு சில்லறை விற்பனையாளர்களை கோருவதாகவும்,அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் களஞ்சியசாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement