• May 18 2024

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு....! பெரமுன தீர்மானம்? samugammedia

Sharmi / Nov 13th 2023, 9:06 am
image

Advertisement

2024ம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தினை பொதுஜன பெரமுன கட்சி எதிர்க்காது என  கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பெரமுனவினருக்கும் இடையில் மனக் கசப்பு நிலவினாலும், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் இன்று முன்வைக்கும் வரவு - செலவுத்திட்டத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவை பெரமுன எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒட்டுமொத்த பாராளுமன்றமும் எடுத்திருந்த நிலையில், வரவு - செலவுத் திட்டத்திலும் அதே நிலைப்பாட்டில் பெரமுன தொடரக் கூடும் என்று கூறப்பட்டது.

ஆனாலும்,  அவ்வாறான நிலைப்பாட்டில் பெரமுன இல்லை என்றும். வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் முடிவிலேயே பொதுஜன பெரமுன உள்ளதாகவும் கூறப்படுகின்றது.



வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு. பெரமுன தீர்மானம் samugammedia 2024ம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தினை பொதுஜன பெரமுன கட்சி எதிர்க்காது என  கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பெரமுனவினருக்கும் இடையில் மனக் கசப்பு நிலவினாலும், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் இன்று முன்வைக்கும் வரவு - செலவுத்திட்டத்தை எதிர்ப்பதில்லை என்ற முடிவை பெரமுன எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.அதேவேளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒட்டுமொத்த பாராளுமன்றமும் எடுத்திருந்த நிலையில், வரவு - செலவுத் திட்டத்திலும் அதே நிலைப்பாட்டில் பெரமுன தொடரக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனாலும்,  அவ்வாறான நிலைப்பாட்டில் பெரமுன இல்லை என்றும். வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் முடிவிலேயே பொதுஜன பெரமுன உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement