• Nov 23 2024

காசா ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்..!! 28 பேர் உயிரிழப்பு..!!

Tamil nila / Feb 11th 2024, 8:50 pm
image

காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எகிப்தின் எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அண்மையில் அறிவித்திருந்தார்.

காசா ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் | Israel Brutal Attack On Gaza Rafah City

அப்பிரதேசங்களை இலக்கு வைத்து வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்பதால், அங்குள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.

எனினும், காசாவில் பெரும்பாலானவர்கள் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக, காசாவின் சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காசா ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல். 28 பேர் உயிரிழப்பு. காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.எகிப்தின் எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அண்மையில் அறிவித்திருந்தார்.காசா ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் | Israel Brutal Attack On Gaza Rafah Cityஅப்பிரதேசங்களை இலக்கு வைத்து வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்பதால், அங்குள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.எனினும், காசாவில் பெரும்பாலானவர்கள் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக, காசாவின் சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இந்நிலையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement