• Sep 08 2024

உலக பல்கலைக்கழகங்களில் பௌத்தம் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு ஒரு நூற்றாண்டை கடந்துவிட்டது; பிரதமர்! samugammedia

Tamil nila / Sep 18th 2023, 6:44 pm
image

Advertisement

மருதானை மகாபோதி அக்ரஸ்ராவக்க மகா விகாரையில் நேற்று (17) நடைபெற்ற அநாகரிக தர்மபாலவின் 159 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன,

"அநாகாரிக தர்மபால உலகிற்கு மிக உயர்ந்த மனித நேயத்தை வழங்கிய இலங்கையின் மகன். இப்படி ஒரு கடினமான பயணத்தை அவர் மேற்கொள்வதற்கு மனிதாபிமானத்தின் குணங்களாலும், பௌத்தத்தின் ஒளியினாலுமே சாத்தியமானது.அதன் காரணமாக உலக வாழ் மக்களுக்கு புத்த பகவானின் போதனைகளை வழங்க முடிந்தது.

இளவரசர் சித்தார்த்தன் பிறந்து, ஞானம் பெற்று, உபதேசம் செய்த இடங்கள்,அநாகாரிக தர்மபாலவின் தலையீடு மற்றும் பணியின் காரணமாகவே உலக மக்களுக்கு மீண்டும் கிடைக்கலானது.

அநாகரிக தர்மபாலவின் அர்ப்பணிப்புக்கு இந்திய அரச தலைவர்கள் வழங்கிய ஆதரவை இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் நினைவுகூர விரும்புகின்றேன்.

அநாகரிக தர்மபால பௌத்தத்தின் அர்த்தத்தை உலகிற்கு எடுத்துச் சென்றார்.

கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் நிலவிய உலகத் தத்துவங்கள் மற்றும் மதங்கள் பற்றிய கருத்தை மிகவும் எளிமையான மற்றும் அர்த்தமுள்ள மொழியில் முன்வைத்ததால்,பௌத்தத்தின் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் அநகாரிக தர்மபால ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கினார்.

பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் இந்த இடங்களுக்கு புத்துயிர் அளிக்க உழைத்தார். எனவே, சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் ஆற்றிய பணி மகா போதிக்கு மாத்திரமன்றி உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும் பெரும் செய்தியாக அமைந்தது.

உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.மேலும் உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தேடுகிறார்கள். புத்தபெருமான் எமக்கு விட்டுச்சென்ற விடயங்கள் இன்று ஒவ்வொரு நாட்டிலும் பேசப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையும் சமூகமும் இந்த கோட்பாட்டின் உன்னத பண்புகளிலிருந்து உருவாக்கப்படும் இந்த நேரத்தில், உலக தர்ம பிரச்சார சேவையால் நிறைவேற்றப்பட்ட பணி மகத்தானது." என தெரிவித்தார்.

உலக பல்கலைக்கழகங்களில் பௌத்தம் பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு ஒரு நூற்றாண்டை கடந்துவிட்டது; பிரதமர் samugammedia மருதானை மகாபோதி அக்ரஸ்ராவக்க மகா விகாரையில் நேற்று (17) நடைபெற்ற அநாகரிக தர்மபாலவின் 159 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன,"அநாகாரிக தர்மபால உலகிற்கு மிக உயர்ந்த மனித நேயத்தை வழங்கிய இலங்கையின் மகன். இப்படி ஒரு கடினமான பயணத்தை அவர் மேற்கொள்வதற்கு மனிதாபிமானத்தின் குணங்களாலும், பௌத்தத்தின் ஒளியினாலுமே சாத்தியமானது.அதன் காரணமாக உலக வாழ் மக்களுக்கு புத்த பகவானின் போதனைகளை வழங்க முடிந்தது.இளவரசர் சித்தார்த்தன் பிறந்து, ஞானம் பெற்று, உபதேசம் செய்த இடங்கள்,அநாகாரிக தர்மபாலவின் தலையீடு மற்றும் பணியின் காரணமாகவே உலக மக்களுக்கு மீண்டும் கிடைக்கலானது.அநாகரிக தர்மபாலவின் அர்ப்பணிப்புக்கு இந்திய அரச தலைவர்கள் வழங்கிய ஆதரவை இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் சார்பில் நினைவுகூர விரும்புகின்றேன்.அநாகரிக தர்மபால பௌத்தத்தின் அர்த்தத்தை உலகிற்கு எடுத்துச் சென்றார்.கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் நிலவிய உலகத் தத்துவங்கள் மற்றும் மதங்கள் பற்றிய கருத்தை மிகவும் எளிமையான மற்றும் அர்த்தமுள்ள மொழியில் முன்வைத்ததால்,பௌத்தத்தின் செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் அநகாரிக தர்மபால ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்கினார்.பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் இந்த இடங்களுக்கு புத்துயிர் அளிக்க உழைத்தார். எனவே, சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் ஆற்றிய பணி மகா போதிக்கு மாத்திரமன்றி உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும் பெரும் செய்தியாக அமைந்தது.உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.மேலும் உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தேடுகிறார்கள். புத்தபெருமான் எமக்கு விட்டுச்சென்ற விடயங்கள் இன்று ஒவ்வொரு நாட்டிலும் பேசப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையும் சமூகமும் இந்த கோட்பாட்டின் உன்னத பண்புகளிலிருந்து உருவாக்கப்படும் இந்த நேரத்தில், உலக தர்ம பிரச்சார சேவையால் நிறைவேற்றப்பட்ட பணி மகத்தானது." என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement