• May 18 2024

நீதிமன்றம் செல்வது மைத்திரி தரப்பினரின் சுதந்திரம்..! - துமிந்த அதிரடி அறிவிப்பு

Chithra / Apr 21st 2024, 12:34 pm
image

Advertisement

நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம் என்றும், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது என்றும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அநுராதபுர பராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் குழுத்தெரிவுகள் யாப்பினை மீறும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் நீதிமன்றத்துக்கு முன்னாள் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் செல்வதற்கு முஸ்தீப்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவே புதிய தெரிவுகளை மேற்கொண்டுள்ளோம். 

அதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடுவதாகஇருந்தால் அதற்கு நாம் தடைகளை ஏற்படுத்த முடியாது. நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம்.

எம்மைப் பொறுத்தவரையில் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியுடனேயே உள்ளனர். 

அவர்கள் கட்சித் தலைமையின் செயற்பாடுகளின் காரணமாக அதிருப்தி அடைந்திருந்தனர். 

ஆகவே அவ்விதமானவர்களை மீண்டும் கட்சியுடன் இணைந்து மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கே விரும்புகின்றார்கள்.

அந்த வகையில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்துவரும் காலத்தில் கட்சியை மீளக் கட்டியமைத்து முன்னெடுக்கும் செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ளோம் என்றார்.

நீதிமன்றம் செல்வது மைத்திரி தரப்பினரின் சுதந்திரம். - துமிந்த அதிரடி அறிவிப்பு நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம் என்றும், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது என்றும் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் அநுராதபுர பராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.அரசியல் குழுத்தெரிவுகள் யாப்பினை மீறும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் நீதிமன்றத்துக்கு முன்னாள் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் செல்வதற்கு முஸ்தீப்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நாம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவே புதிய தெரிவுகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடுவதாகஇருந்தால் அதற்கு நாம் தடைகளை ஏற்படுத்த முடியாது. நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம்.எம்மைப் பொறுத்தவரையில் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியுடனேயே உள்ளனர். அவர்கள் கட்சித் தலைமையின் செயற்பாடுகளின் காரணமாக அதிருப்தி அடைந்திருந்தனர். ஆகவே அவ்விதமானவர்களை மீண்டும் கட்சியுடன் இணைந்து மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கே விரும்புகின்றார்கள்.அந்த வகையில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்துவரும் காலத்தில் கட்சியை மீளக் கட்டியமைத்து முன்னெடுக்கும் செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement