• May 18 2024

வறுமையில் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரி samugammedia

Chithra / Jul 6th 2023, 7:23 am
image

Advertisement

எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், ஒரு வழக்கு இரண்டு, மூன்று மாதங்களிலேயே விசாரித்து முடிக்கப்பட்டுவிடும்.

எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான், பல குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.

சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்றால் இதனை பார்க்க முடியுமாக இருக்கும்.

நோய் வந்த பின்னர் மருந்து கொடுப்பதைவிட, அந்த நோயை வரவிடாமல் தடுக்க வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான போதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். வழக்குகளை நீடிக்காமல் உடனடியாக அவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதனை செய்தால், சிறைச்சாலைகளில் நெரிசலும் ஏற்படாது.

வழக்குகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணியாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்குகள் அதிகம், வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. 

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு பின்னர் சமூக கட்டமைப்பில் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்து மதங்களின் ஒத்துழைப்புடன் சிறந்த மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் சமூக விரோத செயற்பாடுகளுக்கும், குற்றங்களுக்கும் பிரதான காரணியாக உள்ளது. இதன் காரணமாகவே வழக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகளின் பின்னணியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு ஏழ்மையும் ஒரு காரணியாக உள்ளது. ஆகவே, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அவதானம் செலுத்துவதுடன், வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.

வழக்குகள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதை வழக்கறிஞர்கள் விரும்புவார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்போது வழக்கறிஞர்கள் மாத்திரமே பயனடைவார்கள். ஆகவே, வழக்குகளை வெகுவிரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

வறுமையில் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி samugammedia எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களே குற்றங்களில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், ஒரு வழக்கு இரண்டு, மூன்று மாதங்களிலேயே விசாரித்து முடிக்கப்பட்டுவிடும்.எமது நாட்டை பொறுத்தவரை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான், பல குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்.சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்றால் இதனை பார்க்க முடியுமாக இருக்கும்.நோய் வந்த பின்னர் மருந்து கொடுப்பதைவிட, அந்த நோயை வரவிடாமல் தடுக்க வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.இது தொடர்பான போதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். வழக்குகளை நீடிக்காமல் உடனடியாக அவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதனை செய்தால், சிறைச்சாலைகளில் நெரிசலும் ஏற்படாது.வழக்குகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.அனைத்து பிரச்சினைகளுக்கும் போதைப்பொருள் பாவனை பிரதான காரணியாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்குகள் அதிகம், வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தாமல் வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணம் தொடர்பில் ஆராய வேண்டும்.பொருளாதார பாதிப்புக்கு பின்னர் சமூக கட்டமைப்பில் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்து மதங்களின் ஒத்துழைப்புடன் சிறந்த மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் சமூக விரோத செயற்பாடுகளுக்கும், குற்றங்களுக்கும் பிரதான காரணியாக உள்ளது. இதன் காரணமாகவே வழக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகளின் பின்னணியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகிறது.நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு ஏழ்மையும் ஒரு காரணியாக உள்ளது. ஆகவே, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அவதானம் செலுத்துவதுடன், வழக்குகள் தோற்றம் பெறுவதற்கான காரணிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.வழக்குகள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதை வழக்கறிஞர்கள் விரும்புவார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும்போது வழக்கறிஞர்கள் மாத்திரமே பயனடைவார்கள். ஆகவே, வழக்குகளை வெகுவிரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement