• May 08 2024

முதல் போட்டியில் வெற்றியீட்டிய "ஜப்னா கிங்க்ஸ் அணி"

harsha / Dec 6th 2022, 7:24 pm
image

Advertisement

இன்று ஆரம்பமான 2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் Jaffna Kings அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

Galle Gladiators அணிக்கும் Jaffna Kings அணிக்கும் இடையில் முதலாவது போட்டி இன்று இடம்பெற்றது.

 நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட Jaffna Kings அணியை பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

Jaffna Kings அணி சார்பில்  சொய்ப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

தனஞ்ச டி சில்வா 29 ஓட்டங்களையும், திசர பெரேரா 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வஹாப் ரிஹாஸ், ஹிமத் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப் மற்றும் இப்திஹர் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன்படி, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

Galle Gladiators அணி சார்பில் குசல் மெண்டிஸ்  அதிகப்பட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பினுர பெர்ணான்டோ மூன்று விக்கெட்டுக்களையும், விஜயகாந்த வியாஸ்காந்த் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முதல் போட்டியில் வெற்றியீட்டிய "ஜப்னா கிங்க்ஸ் அணி" இன்று ஆரம்பமான 2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் Jaffna Kings அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.Galle Gladiators அணிக்கும் Jaffna Kings அணிக்கும் இடையில் முதலாவது போட்டி இன்று இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட Jaffna Kings அணியை பணித்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.Jaffna Kings அணி சார்பில்  சொய்ப் மலிக் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.தனஞ்ச டி சில்வா 29 ஓட்டங்களையும், திசர பெரேரா 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் வஹாப் ரிஹாஸ், ஹிமத் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப் மற்றும் இப்திஹர் அஹமட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.இதன்படி, 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.Galle Gladiators அணி சார்பில் குசல் மெண்டிஸ்  அதிகப்பட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் பினுர பெர்ணான்டோ மூன்று விக்கெட்டுக்களையும், விஜயகாந்த வியாஸ்காந்த் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement