• May 19 2024

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸ் காவலரண் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Chithra / Apr 4th 2024, 9:25 am
image

Advertisement


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும்  வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ்ப்பாண மாநகரசபை உத்தியோகத்தர்கள்,  இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், பொலிசார், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பின்போது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில்  ஆராயப்பட்டதுடன்,

 காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிசாருக்கு ஏற்படுத்தி கொடுக்குவாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது .

அத்துடன் பேருந்து நிலைய வளாகத்தில்  உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு அக்கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது.

 

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பொலிஸ் காவலரண் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும்  வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ்ப்பாண மாநகரசபை உத்தியோகத்தர்கள்,  இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், பொலிசார், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.குறித்த சந்திப்பின்போது யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில்  ஆராயப்பட்டதுடன், காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிசாருக்கு ஏற்படுத்தி கொடுக்குவாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகளுக்கு அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது .அத்துடன் பேருந்து நிலைய வளாகத்தில்  உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு அக்கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement