• May 19 2024

யாழ்.மாவட்டத்தில் மூன்று மணித்தியாலங்களில் பதிவான அதிக மழை வீழ்ச்சி! samugammedia

Chithra / May 7th 2023, 12:57 pm
image

Advertisement

யாழ் திருநெல்வேலி பகுதியில் இன்று காலை 08.30  மணி தொடக்கம் 11.30 மணி வரையான மூன்று மணித்தியால காலப்பகுதியில் 39.9 மில்லிமீற்றர்  மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில், 

அத்துடன், நேற்றைய தினம் காலை 08.30 மணியிலிருந்து இன்று காலை இன்று காலை 08.30 மணிவரையான காலப்பகுதியில் அச்சுவேலி பகுதியில் 8.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறை பகுதியில் 0.6 மில்லிமீற்ரர் மழைவீழ்ச்சியும், கிளிநொச்சி பகுதியில் 0.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஆனையிறவு பகுதியில் 1.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மற்றும் தெல்லிப்பளை பகுதியில் 3.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

நேற்றைய தினம் பெரும்பாலான பகுதிகள் முகில் மூட்டத்துடன் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. 

நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலையை பொறுத்த மட்டில், அடுத்த சில நாட்களில் தென்கிழக்கு வங்களா விரிகுடாவின் கடற்பரப்பிற்கு மேலாக ஓர்  கீழ் வளிமண்டல தளம்பல் நிலை விருத்தியடைய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில், காற்றானது தென்மேற்கு திசையில் வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். 

ஆகையால், கடலில் பயணம் செய்வோரையும் மீனவ சமூகத்தினரையும் இது குறித்து வளிமண்டல திணைக்களம் விடுக்கின்ற ஆலோசனைகளை கருத்திற்கொண்டு செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.  

அத்தோடு நாளைய தினம், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பல தடவைகள் பெய்யுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. 

மேற்கு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த கற்று வீசக்கூடும். 

எனவே இடி,  மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படக்கூடிய இழப்புகளை குறைத்து கொள்வதற்காக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்

யாழ்.மாவட்டத்தில் மூன்று மணித்தியாலங்களில் பதிவான அதிக மழை வீழ்ச்சி samugammedia யாழ் திருநெல்வேலி பகுதியில் இன்று காலை 08.30  மணி தொடக்கம் 11.30 மணி வரையான மூன்று மணித்தியால காலப்பகுதியில் 39.9 மில்லிமீற்றர்  மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், அத்துடன், நேற்றைய தினம் காலை 08.30 மணியிலிருந்து இன்று காலை இன்று காலை 08.30 மணிவரையான காலப்பகுதியில் அச்சுவேலி பகுதியில் 8.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறை பகுதியில் 0.6 மில்லிமீற்ரர் மழைவீழ்ச்சியும், கிளிநொச்சி பகுதியில் 0.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஆனையிறவு பகுதியில் 1.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மற்றும் தெல்லிப்பளை பகுதியில் 3.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் பெரும்பாலான பகுதிகள் முகில் மூட்டத்துடன் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புகளின் வானிலையை பொறுத்த மட்டில், அடுத்த சில நாட்களில் தென்கிழக்கு வங்களா விரிகுடாவின் கடற்பரப்பிற்கு மேலாக ஓர்  கீழ் வளிமண்டல தளம்பல் நிலை விருத்தியடைய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில், காற்றானது தென்மேற்கு திசையில் வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். ஆகையால், கடலில் பயணம் செய்வோரையும் மீனவ சமூகத்தினரையும் இது குறித்து வளிமண்டல திணைக்களம் விடுக்கின்ற ஆலோசனைகளை கருத்திற்கொண்டு செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.  அத்தோடு நாளைய தினம், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பல தடவைகள் பெய்யுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேற்கு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த கற்று வீசக்கூடும். எனவே இடி,  மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படக்கூடிய இழப்புகளை குறைத்து கொள்வதற்காக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement