• Nov 19 2024

யாழ். வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை - மாநகர சபை

Tharmini / Nov 11th 2024, 12:58 pm
image

யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான, நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற வீதியில் விலங்குக் கழிவுகள், வைத்தியசாலை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பன தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தன.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டப்படுகின்ற கழிவுகளை உண்பதற்கு நாய்கள் அவ்விடத்திற்கு செல்வதனால் வாகன விபத்துக்குளும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பல தடவைகள் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் குறித்த பகுதியை CCTV காமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கும், அவ்வாறு கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபை தயாரிகியுள்ளது.

அத்துடன் குறித்த குப்பை போடும் பகுதிக்கு 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு குப்பைகளை வழங்க முடியும் என்ற அறிவித்தலையும் மாநகர சபை காட்சிப்படுத்தியுள்ளது.




யாழ். வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை - மாநகர சபை யாழ்ப்பாணத்தில் வீதியில் குப்பை போடுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான, நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆரம்பித்துள்ளது.ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை ஊடாக காரைநகர் செல்கின்ற வீதியில் விலங்குக் கழிவுகள், வைத்தியசாலை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் என்பன தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொட்டப்படுகின்ற கழிவுகளை உண்பதற்கு நாய்கள் அவ்விடத்திற்கு செல்வதனால் வாகன விபத்துக்குளும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பல தடவைகள் ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி இருந்தன.இந்நிலையில் குறித்த பகுதியை CCTV காமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிப்பதற்கும், அவ்வாறு கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகர சபை தயாரிகியுள்ளது. அத்துடன் குறித்த குப்பை போடும் பகுதிக்கு 100 மீட்டர்கள் தொலைவில் உள்ள மீள் சுழற்சி நிலையத்திற்கு குப்பைகளை வழங்க முடியும் என்ற அறிவித்தலையும் மாநகர சபை காட்சிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement