• Sep 17 2024

யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி..! பதவியிழந்தார் ஆனோல்ட்!SamugamMedia

Chithra / Feb 28th 2023, 11:03 am
image

Advertisement

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இமானுவேல் ஆனோல்ட் பதவியிழந்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக இன்று மீளவும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் போது முதல்வர் ஆர்னோல்டினால் சபையில் சமர்பிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதன் போது கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய அதேநேரம் காங்கிரஸ் கட்சி, ஈபிடிபி, மணிவண்ணன் தரப்பு ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன் போது ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.  இதனையடுத்து 6 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.


யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி. பதவியிழந்தார் ஆனோல்ட்SamugamMedia யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இமானுவேல் ஆனோல்ட் பதவியிழந்தார்.இந்த வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக இன்று மீளவும் சமர்ப்பிக்கப்பட்டது.இதன் போது முதல்வர் ஆர்னோல்டினால் சபையில் சமர்பிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.இதன் போது கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய அதேநேரம் காங்கிரஸ் கட்சி, ஈபிடிபி, மணிவண்ணன் தரப்பு ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.இதன் போது ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.  இதனையடுத்து 6 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement