• Nov 26 2024

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் 'கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியீடு..!

Sharmi / Oct 4th 2024, 11:51 am
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் 'கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம்(04)  இடம்பெற்றது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து கொண்டனர். 

சஞ்சிகையை கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் வெளியிட முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பெற்றுக்கொண்டார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இச்சஞ்சிகை வெளியீட்டில் மாணவர்களுக்கான வாழ்த்துரையினை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும், சஞ்சிகைக்கான கருத்துரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் வழங்கினர். 

ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'கனலி' சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் ஊடகக்கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் 'கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியீடு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் 'கனலி' மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம்(04)  இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து கொண்டனர். சஞ்சிகையை கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் வெளியிட முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இச்சஞ்சிகை வெளியீட்டில் மாணவர்களுக்கான வாழ்த்துரையினை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும், சஞ்சிகைக்கான கருத்துரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் வழங்கினர். ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'கனலி' சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஊடகக்கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement