• Jun 18 2024

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒரு பொய்யர் - சபையில் கடுப்பான மஹிந்தானந்த அளுத்கமகே!! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 6:10 pm
image

Advertisement

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்ற ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும மற்றும் விமல் விரவன்ச ஆகியோரை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


அவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துக் கொள்ளலாம் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். கடற்பரப்பை மண்ணால், கற்களாலும் நிரப்ப வேண்டும்.


இந்த செயற்திட்டத்தை நிறைவு செய்யும் போது நாட்டில் பாறை வளம் இல்லாமல் போகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.


அவர் ஒரு பொய்யர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர பணிகள் வெற்றிகரமாக தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.


அரசாங்கததில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும போன்றவர்கள் தேர்தல் தொடர்பில் கதைக்கின்றனர்.

 

மக்களாணை இருக்குமாயின் முதலில் அவர்கள் கிராமிய அபிவிருத்து சங்கத்தின் தேர்தலிலாவது வென்று காட்டாட்டும். நீங்கள் தனியாக கட்சியை அமைத்துள்ளீர்கள்.


நீங்கள் எமது நண்பர்களே. எமது கட்சியில் இருந்து பிரிந்துவந்து உங்களுடன் இணைவார்கள் என்றே நினைத்தீர்கள். எங்களின் பொதுஜன பெரமுன அப்படியே இருக்கின்றது.


நண்பர்களே நீங்கள் மீண்டும் எங்கள் பக்கம் வாருங்கள். உங்களை மன்னிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனால் எங்களுடன் வாருங்கள் மீண்டும் இணைந்து செயற்படுவோம்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒரு பொய்யர் - சபையில் கடுப்பான மஹிந்தானந்த அளுத்கமகே SamugamMedia பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்ற ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும மற்றும் விமல் விரவன்ச ஆகியோரை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துக் கொள்ளலாம் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். கடற்பரப்பை மண்ணால், கற்களாலும் நிரப்ப வேண்டும்.இந்த செயற்திட்டத்தை நிறைவு செய்யும் போது நாட்டில் பாறை வளம் இல்லாமல் போகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.அவர் ஒரு பொய்யர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர பணிகள் வெற்றிகரமாக தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.அரசாங்கததில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும போன்றவர்கள் தேர்தல் தொடர்பில் கதைக்கின்றனர். மக்களாணை இருக்குமாயின் முதலில் அவர்கள் கிராமிய அபிவிருத்து சங்கத்தின் தேர்தலிலாவது வென்று காட்டாட்டும். நீங்கள் தனியாக கட்சியை அமைத்துள்ளீர்கள்.நீங்கள் எமது நண்பர்களே. எமது கட்சியில் இருந்து பிரிந்துவந்து உங்களுடன் இணைவார்கள் என்றே நினைத்தீர்கள். எங்களின் பொதுஜன பெரமுன அப்படியே இருக்கின்றது.நண்பர்களே நீங்கள் மீண்டும் எங்கள் பக்கம் வாருங்கள். உங்களை மன்னிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனால் எங்களுடன் வாருங்கள் மீண்டும் இணைந்து செயற்படுவோம்.

Advertisement

Advertisement

Advertisement