• Mar 18 2025

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட ஜப்பானிய தூதுவர்..!

Sharmi / Feb 11th 2025, 1:08 pm
image

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா, தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா(Akio Isomata) தூதரக அதிகாரிகள் இன்று(12) காலை பளை மற்றும் முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், இந்தப் பகுதியில்  மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் பளை மற்றும் முகமாலைப் பகுதியில் டாஸ், கலோரெஸ்ட் மற்றும் சாப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கூறிப்பிடத்தக்கது.



முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட ஜப்பானிய தூதுவர். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா, தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா(Akio Isomata) தூதரக அதிகாரிகள் இன்று(12) காலை பளை மற்றும் முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.இதன்போது குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், இந்தப் பகுதியில்  மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் பளை மற்றும் முகமாலைப் பகுதியில் டாஸ், கலோரெஸ்ட் மற்றும் சாப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கூறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement