• Sep 08 2024

அமெரிக்காவில் நடந்த ‘அபெக்’ உச்சி மாநாட்டில் ஜோ பைடன் – ஜி ஜின்பிங் சந்திப்பு! samugammedia

Tamil nila / Nov 15th 2023, 10:04 pm
image

Advertisement

அமெரிக்காவில் நடந்த ‘அபெக்’ உச்சி மாநாட்டில் ஜோ பைடன் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது. அவர்கள் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள டெஸ்லா தயாரிப்பு ஆலையை பார்வையிட்டார். ஆனால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்திக்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த ‘ஏபிஇசி’ (அபெக்) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பால் அமெரிக்க – சீனா இடையிலான உறவு மேம்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களும் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சிக்கலான நேரங்களில் அவருடன் (ஜி ஜின்பிங்) தொலைபேசியில் பேசமுடியும். அவரும் என்னுடன் பேச முடியும். அமெரிக்க ராணுவ மட்டத்திலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் உள்ளனர்’ என்றார்.

அமெரிக்காவில் நடந்த ‘அபெக்’ உச்சி மாநாட்டில் ஜோ பைடன் – ஜி ஜின்பிங் சந்திப்பு samugammedia அமெரிக்காவில் நடந்த ‘அபெக்’ உச்சி மாநாட்டில் ஜோ பைடன் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது. அவர்கள் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள டெஸ்லா தயாரிப்பு ஆலையை பார்வையிட்டார். ஆனால் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்திக்க முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.அதன்பின் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடந்த ‘ஏபிஇசி’ (அபெக்) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பால் அமெரிக்க – சீனா இடையிலான உறவு மேம்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இரு தலைவர்களும் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சிக்கலான நேரங்களில் அவருடன் (ஜி ஜின்பிங்) தொலைபேசியில் பேசமுடியும். அவரும் என்னுடன் பேச முடியும். அமெரிக்க ராணுவ மட்டத்திலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் உள்ளனர்’ என்றார்.

Advertisement

Advertisement

Advertisement