• Mar 10 2025

கனேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம்: Skype ஊடாக இடம்பெறவுள்ள வழக்கு விசாரணை..!

Sharmi / Mar 7th 2025, 11:06 am
image

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற கனேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒன்பது பேர் தொடர்பான வழக்கு விசாரணையை  இன்றையதினம்  காணொளி(Skype) ஊடாக முன்னெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு பதிவாளரினால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு நீதவானினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 11 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டதரணிபோல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்த பிரதான சந்தேகநபர் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கனேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம்: Skype ஊடாக இடம்பெறவுள்ள வழக்கு விசாரணை. கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற கனேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒன்பது பேர் தொடர்பான வழக்கு விசாரணையை  இன்றையதினம்  காணொளி(Skype) ஊடாக முன்னெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு பதிவாளரினால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு நீதவானினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 11 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டதரணிபோல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்த பிரதான சந்தேகநபர் தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement