• Nov 25 2024

இன்னொரு அத்திப்பட்டியாக மாறிவரும் கரவெட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட கப்பூது கிராமம்..!

Sharmi / Oct 4th 2024, 9:50 am
image

வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்ட மிக பழமையானது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும்.

கடற்பகுதியை வெளிப்புறமாகக் கொண்டு இயற்கை வனப்புகளால் அழகை அள்ளி சொரிகிறது அந்த கப்பூது கிராமம். 

கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் தான் அதிகமாக அங்கு இருக்கின்றனர். 

தாம் பரம்பரையாக வாழ்ந்த நிலத்தினை விட்டுப் போக மனமில்லாமல் செத்தாலும் இந்த மண்ணில் இருந்து சாவோம் என்று இருக்கின்றனர். 

இதேவேளை சனத்தொகை குறைவடைந்தாலும் அண்மையில் இடம்பெற்ற இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தேர்வு செய்யும் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வாக்களிப்பு நிலையமும் அந்த பகுதியில் இயங்கா நிலையில் இருக்கின்ற பாடசாலையில் தேர்தல் வாக்களிப்பு நிலையமாக இயங்கியிருக்கின்றது.

குறித்த பகுதியில் 196 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 101 பேரே வாக்களித்திருக்கின்றனர். 

இதேவேளை இந்த 196 வாக்காளர்களில் பலர் தங்கள் பிள்ளைகளின் கல்வி கற்றல் மற்றும் நகரமயமாதல் வளர்ச்சி வாய்ப்புக்களை தேடி வெளியிடங்களில் தங்கி இருக்கின்றனர்.  

இதேவேளை பல பேர் அயல் பிரதேசங்களுக்கு சென்று குடியேறியுள்ளனர்.

கிராமசேவகர் அலுவலகம் ஒன்று பாடசாலை இருந்த வளாகத்தில் இருக்கின்றது 

வாரத்துக்கு ஒரு தடவை எப்போதாவது திறந்திருக்கும். சில நேரம் கடமைகளுக்கு உத்தியோகத்தர் வருவதில்லை, அயற்கிராமங்களிலே கடமைக்கு வருவதாகவும் அந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். 

இந்தக் கிராமத்துக்கான வீதியின் இருமருங்குகளும் ஒருவழி தரைப்பாதையே போக்குவரத்து பாதையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தப் பாதையாக செல்லும் போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு உத்வேகம் ஏற்படும். 

காரணம் ஈழப்போராட்டத்திற்கு இந்த கிராமம் தளபதி விதுசாவை உவந்தளித்த பெருமைக்குரிய மண்.

அதனால் தான் என்னவோ இந்த கிராம மக்கள் போராட்டத்திற்கு துணையாக அதிகம் உழைத்தனர்.

இன்றும் இந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஆலய பூசகராக கந்தையா எனப்படும் விதுசாவின் தந்தையே பூசை செய்து வருகிறார்.

 தன்மகளை மண்ணுக்காக தந்துவிட்டு விதுசாவின் தயார் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறார். 

இக்கிராமத்தில் ஒரு பாடசாலை தான் இருந்தது. அந்தப் பாடசாலையும் இயங்காமல் பலவருடங்கள் கடந்து விட்டன. 

இதனால் இந்தக் கிராம மக்களில் பலர் அயல் கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

 பாடசாலை தனது செயற்பாடுகளை இடைநிறுத்தி கொள்வதற்கு முன் இறுதியாக 12 பிள்ளைகள் கல்வி கற்றனர். 

16 கிலோமீற்றர் தாண்டி மண்டான் பகுதியில் இருந்து குழாய் மூலம் இந்தக் கிராமத்துக்கு தண்ணீர் வருகிறது.

 அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது என்றாலும் நெல்லியடிக்குச் சென்று வருகின்றனர். 

இந்த கிராம மக்கள் பொலிஸ் முறைப்பாடுகள் செய்வதற்காக கூட 15Km தூரமுள்ள நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் இன்று உள்ளனர்.

 ஏதாவது குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடனடியாக நடவடிக்கை செய்வதற்கான எந்த திட்ட வரைவுகளும் இந்த கிராமத்தில் இல்லை 

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்பகுதி மக்கள் வடமராட்சி பகுதியில் குடிபெயர்ந்தனர்.

விடுதலைப் பு.லி.க.ளுக்கும்  இலங்கை இராணுவத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நிறுத்த சமாதான காலப் பகுதியில் இந்தக் கிராமத்தில் மக்கள் பல்கிப் பெருகிக் காணப்பட்டனர். 

அன்று குடியிருப்புக்களாக காணப்பட்ட இக் கிராமத்தின் தற்போதைய சூழல் திரைப்பட நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் வரும் இந்தியாவின் அத்திப்பட்டி கிராமத்தை தான் ஞாபகமூட்டும் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

 எவருமே கண்டு கொள்ளாத கிராமமாக மாறிவிட்டது. 

தமிழர்களை உலகறியச் செய்த விடுதலைப் போராட்டத்துக்கு பெரும் பங்காற்றிய இந்தக் கிராமத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே தலைகுனிவாகும்.

1987 வடமராட்சிப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசன் என்ற பெயர் சூட்டி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிப் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இந்தக் காலப் பகுதியில் யாழ்பாணத்திற்கும்-வடமராட்சிக்குமான பிரதான இணைப்பு வீதியாக இந்த கப்பூது வீதியே காணப்பட்டிருந்தது. போர் வரலாறு கொண்ட இந்தக் கிராமத்தில் இன்று மக்கள் குறைவாக வாழ்கின்றனர். 

இருந்தும் இன்னொரு அத்திப்பட்டியை தடுக்க யாருளர்?





இன்னொரு அத்திப்பட்டியாக மாறிவரும் கரவெட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட கப்பூது கிராமம். வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்ட மிக பழமையானது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும்.கடற்பகுதியை வெளிப்புறமாகக் கொண்டு இயற்கை வனப்புகளால் அழகை அள்ளி சொரிகிறது அந்த கப்பூது கிராமம். கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் தான் அதிகமாக அங்கு இருக்கின்றனர். தாம் பரம்பரையாக வாழ்ந்த நிலத்தினை விட்டுப் போக மனமில்லாமல் செத்தாலும் இந்த மண்ணில் இருந்து சாவோம் என்று இருக்கின்றனர். இதேவேளை சனத்தொகை குறைவடைந்தாலும் அண்மையில் இடம்பெற்ற இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தேர்வு செய்யும் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வாக்களிப்பு நிலையமும் அந்த பகுதியில் இயங்கா நிலையில் இருக்கின்ற பாடசாலையில் தேர்தல் வாக்களிப்பு நிலையமாக இயங்கியிருக்கின்றது.குறித்த பகுதியில் 196 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 101 பேரே வாக்களித்திருக்கின்றனர். இதேவேளை இந்த 196 வாக்காளர்களில் பலர் தங்கள் பிள்ளைகளின் கல்வி கற்றல் மற்றும் நகரமயமாதல் வளர்ச்சி வாய்ப்புக்களை தேடி வெளியிடங்களில் தங்கி இருக்கின்றனர்.  இதேவேளை பல பேர் அயல் பிரதேசங்களுக்கு சென்று குடியேறியுள்ளனர்.கிராமசேவகர் அலுவலகம் ஒன்று பாடசாலை இருந்த வளாகத்தில் இருக்கின்றது வாரத்துக்கு ஒரு தடவை எப்போதாவது திறந்திருக்கும். சில நேரம் கடமைகளுக்கு உத்தியோகத்தர் வருவதில்லை, அயற்கிராமங்களிலே கடமைக்கு வருவதாகவும் அந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். இந்தக் கிராமத்துக்கான வீதியின் இருமருங்குகளும் ஒருவழி தரைப்பாதையே போக்குவரத்து பாதையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பாதையாக செல்லும் போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு உத்வேகம் ஏற்படும். காரணம் ஈழப்போராட்டத்திற்கு இந்த கிராமம் தளபதி விதுசாவை உவந்தளித்த பெருமைக்குரிய மண்.அதனால் தான் என்னவோ இந்த கிராம மக்கள் போராட்டத்திற்கு துணையாக அதிகம் உழைத்தனர்.இன்றும் இந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஆலய பூசகராக கந்தையா எனப்படும் விதுசாவின் தந்தையே பூசை செய்து வருகிறார். தன்மகளை மண்ணுக்காக தந்துவிட்டு விதுசாவின் தயார் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறார். இக்கிராமத்தில் ஒரு பாடசாலை தான் இருந்தது. அந்தப் பாடசாலையும் இயங்காமல் பலவருடங்கள் கடந்து விட்டன. இதனால் இந்தக் கிராம மக்களில் பலர் அயல் கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். பாடசாலை தனது செயற்பாடுகளை இடைநிறுத்தி கொள்வதற்கு முன் இறுதியாக 12 பிள்ளைகள் கல்வி கற்றனர். 16 கிலோமீற்றர் தாண்டி மண்டான் பகுதியில் இருந்து குழாய் மூலம் இந்தக் கிராமத்துக்கு தண்ணீர் வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது என்றாலும் நெல்லியடிக்குச் சென்று வருகின்றனர். இந்த கிராம மக்கள் பொலிஸ் முறைப்பாடுகள் செய்வதற்காக கூட 15Km தூரமுள்ள நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் இன்று உள்ளனர். ஏதாவது குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடனடியாக நடவடிக்கை செய்வதற்கான எந்த திட்ட வரைவுகளும் இந்த கிராமத்தில் இல்லை இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்பகுதி மக்கள் வடமராட்சி பகுதியில் குடிபெயர்ந்தனர்.விடுதலைப் பு.லி.க.ளுக்கும்  இலங்கை இராணுவத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நிறுத்த சமாதான காலப் பகுதியில் இந்தக் கிராமத்தில் மக்கள் பல்கிப் பெருகிக் காணப்பட்டனர். அன்று குடியிருப்புக்களாக காணப்பட்ட இக் கிராமத்தின் தற்போதைய சூழல் திரைப்பட நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் வரும் இந்தியாவின் அத்திப்பட்டி கிராமத்தை தான் ஞாபகமூட்டும் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எவருமே கண்டு கொள்ளாத கிராமமாக மாறிவிட்டது. தமிழர்களை உலகறியச் செய்த விடுதலைப் போராட்டத்துக்கு பெரும் பங்காற்றிய இந்தக் கிராமத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே தலைகுனிவாகும்.1987 வடமராட்சிப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசன் என்ற பெயர் சூட்டி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிப் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.இந்தக் காலப் பகுதியில் யாழ்பாணத்திற்கும்-வடமராட்சிக்குமான பிரதான இணைப்பு வீதியாக இந்த கப்பூது வீதியே காணப்பட்டிருந்தது. போர் வரலாறு கொண்ட இந்தக் கிராமத்தில் இன்று மக்கள் குறைவாக வாழ்கின்றனர். இருந்தும் இன்னொரு அத்திப்பட்டியை தடுக்க யாருளர்

Advertisement

Advertisement

Advertisement