• Jun 18 2024

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இடைநிறுத்தம்! - மின்வெட்டு அதிகரிக்குமா?

Chithra / Jan 12th 2023, 9:52 am
image

Advertisement

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் (12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக தேசிய மின்னுற்பத்திக்கு 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை ஒரு நாளுக்கு இயக்குவதற்கு சுமார் 9 லீற்றர் நெப்தா எரிபொருள் தேவைப்படுவதாகவும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நீர்மின் அலகுக்கு பின்னர் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இடைநிறுத்தம் - மின்வெட்டு அதிகரிக்குமா களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் (12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.இதன் காரணமாக தேசிய மின்னுற்பத்திக்கு 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை ஒரு நாளுக்கு இயக்குவதற்கு சுமார் 9 லீற்றர் நெப்தா எரிபொருள் தேவைப்படுவதாகவும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் நீர்மின் அலகுக்கு பின்னர் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement