• Nov 25 2024

சிறப்புற இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு...!samugammedia

Anaath / Dec 28th 2023, 2:09 pm
image

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்  குறித்த மாவட்டத்தின்  விளையாட்டுத் துறையில் சாதனை புரித்த வீர வீராங்கனைகளை கெளரவப்படுத்துவதற்கான  வர்ண இரவு நிகழ்வு இன்று(28) வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த  நிகழ்வு கிளிநொச்சி  மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு  நடைபெற்றது.

இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி தெற்கு வலையக்கல்விப் பணிப்பாளர் சி.கமலறாஜன் மற்றும் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்  அ.க சிவனருள்ராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கெளரவ விருந்தினர்களாக வட மாகாண விளையாட்டு திணைக்கள  முன்னாள் பணிப்பாளர் S.அண்ணாத்துரை, வட மாகாண விளையாட்டு திணைக்கள  முன்னாள் உதவிப் பணிப்பாளர் கனகராஜா, National Masters & Seniors Athletics` போட்டியில்  தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த S.அகிலத்திருநாயகி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பண்டவாத்திய இசைக்கருவிகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வுகள் மற்றும் கலைநிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கல், வீரர்களின் விளையாட்டு அறிமுகம் முதலான நிகழ்வுகள்  இடம்பெற்றன.

மேலும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறையில் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த 12 வீர வீராங்கனைகளும், மாகாண போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த 204 வீர வீராங்கனைகளும், பயிற்றுவிப்பாளர்கள் 16 பேரும் உள்ளிட்ட மொத்தமாக 232 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக கிளைத் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், விழாவிற்கான நிதி அனுசரனையாளர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை வீர வீரங்கனைகள், பாடசாலை மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சிறப்புற இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட வர்ண இரவுகள் விருது வழங்கும் நிகழ்வு.samugammedia கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில்  குறித்த மாவட்டத்தின்  விளையாட்டுத் துறையில் சாதனை புரித்த வீர வீராங்கனைகளை கெளரவப்படுத்துவதற்கான  வர்ண இரவு நிகழ்வு இன்று(28) வியாழக்கிழமை நடைபெற்றது.இந்த  நிகழ்வு கிளிநொச்சி  மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு  நடைபெற்றது.இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா கலந்து சிறப்பித்தார்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி தெற்கு வலையக்கல்விப் பணிப்பாளர் சி.கமலறாஜன் மற்றும் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்  அ.க சிவனருள்ராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.கெளரவ விருந்தினர்களாக வட மாகாண விளையாட்டு திணைக்கள  முன்னாள் பணிப்பாளர் S.அண்ணாத்துரை, வட மாகாண விளையாட்டு திணைக்கள  முன்னாள் உதவிப் பணிப்பாளர் கனகராஜா, National Masters & Seniors Athletics` போட்டியில்  தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த S.அகிலத்திருநாயகி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது அதிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பண்டவாத்திய இசைக்கருவிகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வுகள் மற்றும் கலைநிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கல், வீரர்களின் விளையாட்டு அறிமுகம் முதலான நிகழ்வுகள்  இடம்பெற்றன.மேலும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறையில் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த 12 வீர வீராங்கனைகளும், மாகாண போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த 204 வீர வீராங்கனைகளும், பயிற்றுவிப்பாளர்கள் 16 பேரும் உள்ளிட்ட மொத்தமாக 232 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக கிளைத் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், விழாவிற்கான நிதி அனுசரனையாளர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை வீர வீரங்கனைகள், பாடசாலை மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement