• Feb 06 2025

கிளிநொச்சி மாவட்ட தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு

Tharmini / Dec 6th 2024, 1:10 pm
image

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (06) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.க.பகீரதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, தொழிற்சந்தை நிகழ்வினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.இன்பராஜ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.சந்தீபன், றகமா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் இரா.சஞ்ஜெய்காந்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த தொழிற்சந்தையில் 40ற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கி வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதனை குறித்த வளாகத்தில் அவதானிக்க முடிகிறது.

குறித்த நிகழ்வு மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் இருக்கின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக குறித்த தொழிற் சந்தையானது நடாத்தப்படுகிறது.

அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்களை அழைத்து, தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களையும் இணைத்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபன், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் துறையினை எதிர்பார்ப்பவர்கள், தொழிற் பயிற்சி பெறுநர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





கிளிநொச்சி மாவட்ட தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (06) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.க.பகீரதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, தொழிற்சந்தை நிகழ்வினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.மேலும், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.இன்பராஜ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.சந்தீபன், றகமா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் இரா.சஞ்ஜெய்காந்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.குறித்த தொழிற்சந்தையில் 40ற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கி வருகின்றன.கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதனை குறித்த வளாகத்தில் அவதானிக்க முடிகிறது.குறித்த நிகழ்வு மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் இருக்கின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக குறித்த தொழிற் சந்தையானது நடாத்தப்படுகிறது.அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்களை அழைத்து, தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களையும் இணைத்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.சிவசொரூபன், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் துறையினை எதிர்பார்ப்பவர்கள், தொழிற் பயிற்சி பெறுநர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement