• Sep 08 2024

கொக்குத்தொடுவாய் புதைகுழி...! சரணடைந்தவர்களே கொன்று குவிப்பு...!உண்மைகள் விரைவில் நிரூபணமாகும் என்கிறார் சபா. குகதாஸ்...!samugammedia

Sharmi / Sep 14th 2023, 2:11 pm
image

Advertisement

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழியில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இலட்சக்கணக்கான பொது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் இது உலகம் அறிந்த விடயம். சரணடைந்த பின்னர் யாராக இருந்தாலும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அது தான் தர்மம்.

ஆனால், அன்றைய ஆட்சியாளர் ராஐபக்சாக்கள் இராணுவத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டியவர்களை போரின் மரபு அறங்களை மீறி படுகொலை செய்து புதை குழிகள் குவித்துள்ளனர்.

இந்த அநியாயங்கள் பல இடங்களில் ஆதாரத்துடன் வெளிவந்தாலும் தற்போது கொக்குத்தொடுவாயில் வெளிவந்த வண்ணம் உள்ள படுகொலை ஆதாரங்கள் எதிர்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேறு பல இடங்களிலும் வெளிவரும். காரணம் ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்னர்.

பலரைத் தேடுவதற்கு உறவினர்கள் உயிருடன் இல்லை. காரணம்  பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொத்துக் கொத்தாக இறுதிப் போரில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர் இதனால் உண்மைகள் வெளியில் வரவில்லை.

வட்டுவாகலில் சரணடைந்த ஒரு தொகுதி போராளிகளை  தடுத்து வைத்திருந்தனர். பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடியில் சரணடைந்தவர்களில் ஒரு தொகுதியினரை மீண்டும் வட்டுவாகலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அதற்கான போதுமான சாட்சியங்களாக உறவினர்கள் உள்ளனர் அவர்கள் இன்று வரை அவர்களை தேடி அலைகின்றனர். அத்துடன் சரணடைந்த ஏனைய மக்களும் நேரில் பார்த்தனர்

ஆகவே, கொக்குத் தொடுவாய் புதைகுழியில் வெளிவரும் தடையங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என்ற உண்மை விரைவில் நிரூபணமாகும் எனவும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் புதைகுழி. சரணடைந்தவர்களே கொன்று குவிப்பு.உண்மைகள் விரைவில் நிரூபணமாகும் என்கிறார் சபா. குகதாஸ்.samugammedia முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழியில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சரணடைந்தவர்களே கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இலட்சக்கணக்கான பொது மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் இது உலகம் அறிந்த விடயம். சரணடைந்த பின்னர் யாராக இருந்தாலும் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அது தான் தர்மம்.ஆனால், அன்றைய ஆட்சியாளர் ராஐபக்சாக்கள் இராணுவத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக விடுதலை செய்ய வேண்டியவர்களை போரின் மரபு அறங்களை மீறி படுகொலை செய்து புதை குழிகள் குவித்துள்ளனர்.இந்த அநியாயங்கள் பல இடங்களில் ஆதாரத்துடன் வெளிவந்தாலும் தற்போது கொக்குத்தொடுவாயில் வெளிவந்த வண்ணம் உள்ள படுகொலை ஆதாரங்கள் எதிர்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேறு பல இடங்களிலும் வெளிவரும். காரணம் ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்னர். பலரைத் தேடுவதற்கு உறவினர்கள் உயிருடன் இல்லை. காரணம்  பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொத்துக் கொத்தாக இறுதிப் போரில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர் இதனால் உண்மைகள் வெளியில் வரவில்லை.வட்டுவாகலில் சரணடைந்த ஒரு தொகுதி போராளிகளை  தடுத்து வைத்திருந்தனர். பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடியில் சரணடைந்தவர்களில் ஒரு தொகுதியினரை மீண்டும் வட்டுவாகலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அதற்கான போதுமான சாட்சியங்களாக உறவினர்கள் உள்ளனர் அவர்கள் இன்று வரை அவர்களை தேடி அலைகின்றனர். அத்துடன் சரணடைந்த ஏனைய மக்களும் நேரில் பார்த்தனர்ஆகவே, கொக்குத் தொடுவாய் புதைகுழியில் வெளிவரும் தடையங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என்ற உண்மை விரைவில் நிரூபணமாகும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement