• Mar 06 2025

காணி மோசடி விவகாரம்; மேர்வின் சில்வாவைத் தொடர்ந்து மேலும் அறுவர் கைது!

Chithra / Mar 6th 2025, 1:08 pm
image


களனி பகுதியில் காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் டி சில்வா நேற்று (05) இரவு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காணி மோசடி விவகாரம்; மேர்வின் சில்வாவைத் தொடர்ந்து மேலும் அறுவர் கைது களனி பகுதியில் காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் டி சில்வா நேற்று (05) இரவு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement