• May 18 2024

இலங்கையில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களே அவதானம்!

Tamil nila / Dec 5th 2022, 2:17 pm
image

Advertisement

நாட்டில் தொடரும் சீராற்ற காலநிலை காரணமாக இலங்கையில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


1ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையாக இது விடுக்கப்பட்டுள்ளது.


கேகாலை, இரத்தினபுரி மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவு, கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு, காலி நாகொட இங்கிரிய மற்றும் களுத்துறை  ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த 1ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதற்கமைய இந்த எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மக்களே அவதானம் நாட்டில் தொடரும் சீராற்ற காலநிலை காரணமாக இலங்கையில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.1ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையாக இது விடுக்கப்பட்டுள்ளது.கேகாலை, இரத்தினபுரி மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவு, கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு, காலி நாகொட இங்கிரிய மற்றும் களுத்துறை  ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த 1ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய இந்த எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement