• Jun 02 2024

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்..!samugammedia

Sharmi / Aug 7th 2023, 11:11 am
image

Advertisement

யாழில் அமைந்துள்ள காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார்.

இதன் போது குறித்த அலுவலகத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலும் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி  மகேஷ் கட்டுலந்தவின் அழைப்பின் பேரில் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த, காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி தற்பரன்,  காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ் பிராந்திய இணைப்பாளர் செல்வகுமார், ஜனாதிபதியின் மேலதிக இணைப்பாளர்  இளங்கோவன் உள்ளிட்டவர்கள்  குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.




காணாமல் போனோர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்.samugammedia யாழில் அமைந்துள்ள காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு நேற்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்திருந்தார். இதன் போது குறித்த அலுவலகத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலும் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி  மகேஷ் கட்டுலந்தவின் அழைப்பின் பேரில் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இதன் போது காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த, காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி தற்பரன்,  காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ் பிராந்திய இணைப்பாளர் செல்வகுமார், ஜனாதிபதியின் மேலதிக இணைப்பாளர்  இளங்கோவன் உள்ளிட்டவர்கள்  குறித்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement