• Sep 17 2024

தொடரும் இலை உதிர்வு நோய்த் தாக்கம்...! இறப்பர் வியாபாரிகள் பாதிப்பு...!samugammedia

Sharmi / Sep 6th 2023, 11:38 am
image

Advertisement

இலங்கையில் இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருவதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக தொடரும் இலை உதிர்வு நோய் காரணமாகவே இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருகின்றது.

இறப்பர் விளைச்சல் குறையும் பட்சத்தில் நாட்டின் தேவைக்காக பாலையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என இறப்பர் வர்த்தகர்கள் சங்க தலைவர் மனோஜ் உடுகம்பலா தெரிவித்தார்.

புதிதாக நடப்பட்ட இறப்பர் மரத்தினால் 03 வருடங்களுக்குள் பாலை உற்பத்தி செய்ய முடியும் எனினும் இந்நோய் காரணமாக அறுவடை செய்வதற்கு ஏழு வருடங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை குணப்படுத்தும் வேலைத்திட்டத்தை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்திருந்தது.


தொடரும் இலை உதிர்வு நோய்த் தாக்கம். இறப்பர் வியாபாரிகள் பாதிப்பு.samugammedia இலங்கையில் இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருவதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பல வருடங்களாக தொடரும் இலை உதிர்வு நோய் காரணமாகவே இறப்பர் விளைச்சல் வேகமாக குறைந்து வருகின்றது.இறப்பர் விளைச்சல் குறையும் பட்சத்தில் நாட்டின் தேவைக்காக பாலையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என இறப்பர் வர்த்தகர்கள் சங்க தலைவர் மனோஜ் உடுகம்பலா தெரிவித்தார்.புதிதாக நடப்பட்ட இறப்பர் மரத்தினால் 03 வருடங்களுக்குள் பாலை உற்பத்தி செய்ய முடியும் எனினும் இந்நோய் காரணமாக அறுவடை செய்வதற்கு ஏழு வருடங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையை குணப்படுத்தும் வேலைத்திட்டத்தை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement