• Sep 08 2024

மன்னாரில் குளியல் அறைகளில் மாயமான முக்கிய பொருள்..! பொலிஸார் அதிரடி..! இருவர் கைது...!samugammedia

Sharmi / Sep 6th 2023, 11:48 am
image

Advertisement

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அறை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து  சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குளியல் அறைகளில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்,பிரதான பொலிஸ் பரிசோதகருமான சந்தன பிரசாத் ஜெயதிலக்க பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் நிப்பூன் தலைமையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் குறித்த இரு சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


மன்னாரில் குளியல் அறைகளில் மாயமான முக்கிய பொருள். பொலிஸார் அதிரடி. இருவர் கைது.samugammedia மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அறை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து  சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.குளியல் அறைகளில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்,பிரதான பொலிஸ் பரிசோதகருமான சந்தன பிரசாத் ஜெயதிலக்க பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் நிப்பூன் தலைமையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.விசாரணைகளின் பின் குறித்த இரு சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement