• May 18 2024

மே1 ஆம் திகதி கொழும்பை முடக்குவோம்...!ரணில் ராஜபக்சவிற்கு மக்கள் ஆணையில்லை - ஜோசப் ஸ்டாலின்! samugammedia

Sharmi / Apr 29th 2023, 1:02 pm
image

Advertisement

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை மே 01 திகதியன்று முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மே தினக்கூட்டமானது மதியம் 1.00 மணியளிவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளதாகவும் இதில் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளையே முன்வைக்கவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்களின் ஆணை இல்லாமலே செயற்படுவதாகவும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுடன் செயற்படவுள்ளதாகவும் அவ்வாறு செயற்பட்டால் அவை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே தோற்றுவிக்கும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் மீள செலுத்த வேண்டும் என்றும் எதிர்கால சந்ததிகள் எவ்வாறு இந்த நாட்டில் வாழ முடியும் என்றும் கோள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளியில் கொண்டு வருவதில் தொழிற்சங்கங்கள் முன்நின்று செயற்படுவதனாலேயே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டு வருவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மே1 ஆம் திகதி கொழும்பை முடக்குவோம்.ரணில் ராஜபக்சவிற்கு மக்கள் ஆணையில்லை - ஜோசப் ஸ்டாலின் samugammedia அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை மே 01 திகதியன்று முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.மே தினக்கூட்டமானது மதியம் 1.00 மணியளிவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பமாகவுள்ளதாகவும் இதில் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளையே முன்வைக்கவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.ரணில் தலைமையிலான அரசாங்கம் மக்களின் ஆணை இல்லாமலே செயற்படுவதாகவும் ரணில் ராஜபக்ச அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுடன் செயற்படவுள்ளதாகவும் அவ்வாறு செயற்பட்டால் அவை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே தோற்றுவிக்கும் என்றும் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் மீள செலுத்த வேண்டும் என்றும் எதிர்கால சந்ததிகள் எவ்வாறு இந்த நாட்டில் வாழ முடியும் என்றும் கோள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை வெளியில் கொண்டு வருவதில் தொழிற்சங்கங்கள் முன்நின்று செயற்படுவதனாலேயே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டு வருவதற்கு அரசு முயற்சிப்பதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement