• Jan 19 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்த முடியும் - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

Chithra / Jan 13th 2025, 8:52 am
image


உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சிடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. 

தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது.

தேர்தல் சட்ட திருத்தத்துக்குள் உள்ளடக்கப்படாத விடயங்களை உள்ளூராட்சி மன்றத்தின் போது ஆணைக்குழு செயற்படுத்தலாம்.

இதனால் எவ்வித சட்ட சிக்கல்களும் ஏற்படாது. பெண் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்த முடியும் - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சிடம் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது.தேர்தல் சட்ட திருத்தத்துக்குள் உள்ளடக்கப்படாத விடயங்களை உள்ளூராட்சி மன்றத்தின் போது ஆணைக்குழு செயற்படுத்தலாம்.இதனால் எவ்வித சட்ட சிக்கல்களும் ஏற்படாது. பெண் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement