• May 18 2024

உள்ளூர் சிறுதொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது - மீனவ பிரதிநிதி மதியழகன் samugammedia

Chithra / Aug 17th 2023, 4:58 pm
image

Advertisement

உள்ளூர் சிறுதொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. உள்ளூர் இழுவைப் படகுகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சுருக்குவலையினால் பாரியளவில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மதியழகன் தெரிவித்துள்ளார். 

இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை 1996 ம் ஆண்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் தெரிவிப்பதாகவும், ஆனால் யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத்துறை பணிப்பாளரால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என முன்னாள் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1996ம் ஆண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி AD தெரிவிக்கின்றார். இதன்படி ஏன் யாழ்ப்பாண மாவட்ட AD யினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

சுருக்குவலைத் தொழிலை மேற்கொள்ளமுடியாத நிலையில் இன்று சுருக்குவலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போதுள்ள கூட்டுறவு ஆணையாளர் ஒரு அரசிற்கட்சியின் கீழ் இயங்கிவரும் நிலையில் சம்மேளனத்தை கலைத்து நியமன அடிப்படையில் நிருவாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சிதைவடைந்து போயுள்ளது. கட்சிக்கு அடிபணிந்து நியமனம் வழங்கல் சட்டத்தில் இடமில்லை.

சட்டவிரோத முறையிலான தொழிலை உடன் நடைமுறைப்படுத்துங்கள், உங்களுக்கு நடைமுறைப்படுத்த துப்பில்லையாயின் பதவிகளை இராஜனமா செய்யுங்கள். யாழ்ப்பாண நீரேரியில் சிறகு வலைத் தொழிலை மேற்கொள்ள முடியாதவாறு தொழிலாளர்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள். 

அட்டைப் பண்ணைகளால் சீரழிந்துபோயுள்ளது. இன்று மன்னாரில் சீனாக்காறர்கள் வழக்குப் போடும் நிலைக்கு வந்துள்ளது.

சீனாவுக்க கடலட்டைப் பண்ணை போடுறார்கள் என்று கூறும் போது யாரும் கேட்கவில்லை, பினாமியாக உள்ள ஒருவருக்கு சீனாக்காறன் வழக்குப் போடும் நிலை உருவாகியுள்ளது.

பண்ணை நடத்தத் தெரியாதவர்களுக்கு பண்ணையைக் கொடுத்து இன்று அவர்கள் அழுகிறார்கள்.  

கடல்வளம் சீரழிகிறது, மாசுபடுகிறது. இதனை ஆளுநர் கூடக் கதைக்க முடியவில்லை, ஒருகிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு எங்களை அழைப்பது கிடையாது, எமது வளத்தையும் சாகடித்து எம்மையும் சாகடிக்காமல் பதவிகளை இராஜினமா செய்துவிட்டுப் போங்கள் என்றார்.

உள்ளூர் சிறுதொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது - மீனவ பிரதிநிதி மதியழகன் samugammedia உள்ளூர் சிறுதொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளது. உள்ளூர் இழுவைப் படகுகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சுருக்குவலையினால் பாரியளவில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மதியழகன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதேவேளை 1996 ம் ஆண்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத்துறை பிரதி பணிப்பாளர் தெரிவிப்பதாகவும், ஆனால் யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத்துறை பணிப்பாளரால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை என முன்னாள் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,1996ம் ஆண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி AD தெரிவிக்கின்றார். இதன்படி ஏன் யாழ்ப்பாண மாவட்ட AD யினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.சுருக்குவலைத் தொழிலை மேற்கொள்ளமுடியாத நிலையில் இன்று சுருக்குவலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.தற்போதுள்ள கூட்டுறவு ஆணையாளர் ஒரு அரசிற்கட்சியின் கீழ் இயங்கிவரும் நிலையில் சம்மேளனத்தை கலைத்து நியமன அடிப்படையில் நிருவாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு சிதைவடைந்து போயுள்ளது. கட்சிக்கு அடிபணிந்து நியமனம் வழங்கல் சட்டத்தில் இடமில்லை.சட்டவிரோத முறையிலான தொழிலை உடன் நடைமுறைப்படுத்துங்கள், உங்களுக்கு நடைமுறைப்படுத்த துப்பில்லையாயின் பதவிகளை இராஜனமா செய்யுங்கள். யாழ்ப்பாண நீரேரியில் சிறகு வலைத் தொழிலை மேற்கொள்ள முடியாதவாறு தொழிலாளர்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள். அட்டைப் பண்ணைகளால் சீரழிந்துபோயுள்ளது. இன்று மன்னாரில் சீனாக்காறர்கள் வழக்குப் போடும் நிலைக்கு வந்துள்ளது.சீனாவுக்க கடலட்டைப் பண்ணை போடுறார்கள் என்று கூறும் போது யாரும் கேட்கவில்லை, பினாமியாக உள்ள ஒருவருக்கு சீனாக்காறன் வழக்குப் போடும் நிலை உருவாகியுள்ளது.பண்ணை நடத்தத் தெரியாதவர்களுக்கு பண்ணையைக் கொடுத்து இன்று அவர்கள் அழுகிறார்கள்.  கடல்வளம் சீரழிகிறது, மாசுபடுகிறது. இதனை ஆளுநர் கூடக் கதைக்க முடியவில்லை, ஒருகிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு எங்களை அழைப்பது கிடையாது, எமது வளத்தையும் சாகடித்து எம்மையும் சாகடிக்காமல் பதவிகளை இராஜினமா செய்துவிட்டுப் போங்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement