• Apr 26 2024

கள்ளு குடித்து களிப்படைந்த மாதுக்கள்- சொல்லு பிழைக்க வைத்த பொலிசார்!SamugamMedia

Sharmi / Mar 25th 2023, 4:27 pm
image

Advertisement

கேரளாவில் கள்ளு குடித்து வீடியோ வெளியிட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கேரள மாநிலத்தில், மதுபான கடைகள் இருப்பது போலக் கள்ளுக்கடைகளும் அமர்ந்து குடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு  இருக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் கள்ளுக்கடை ஒன்றிற்கு இளம் பெண்கள் சிலர் சென்றுள்ளதுடன் அந்த பாருக்குள்ளேயே உட்கார்ந்து கள்ளு குடித்துள்ளனர். கள்ளு குடிக்கும் வீடியோவினை  அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட அவை  வைரலாகி, கேரளாவின்  சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வைக்கு சென்றுள்ளது.

 வீடியோவின் உதவியுடன் கள்ளு குடிக்கும் இளம் பெண்கள் குறித்து விசாரணையில் பொலிசார்  ஈடுபட  குறிப்பித்த கள்ளுக்கடையானது திருச்சூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குண்டேலிகடவு பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்  கள்ளுக்கடையில் அமர்ந்து கள்ளு குடித்த பெண்களின் விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணையின் போது அந்த இளம் பெண்கள், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலிக்காகவும், சோஷியல் மீடியாவில் ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதற்காகவும் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

கைதான பெண்களில் அஞ்சனா என்பவர்  திருமணமாகி கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் கணவர் ஃபாரினில் இருந்து வந்துவிட்டால், அதை கொண்டாடுவதற்காக தனது தோழிகளுக்கு கள்ளுக்கடையில் ட்ரீட் வைத்துள்ளாதாக கூறப்பட்டுள்ளது.

அதன் போது  விளையாட்டாக,  கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்த அஞ்சனா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டால்  கைது வரை இந்த வீடியோ செல்லும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

எனினும், பெண்களை காவல்துறையினர் கைது செய்தநிலையில், அவர்களுக்கு அறிவுரை வழங்கிய உடனடியாக ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

 கள்ளு குடிப்பதற்கெல்லாம் கைது தேவையா? ஆண்களை ஏன் கைது செய்வதில்லை? பெண் குடித்தாலும், ஆண் குடித்தாலும் ஒன்றுதானே? ஏதோ ஒரு வகையில் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கிறீர்கள் என ஒருசாரார் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மற்றொரு தரப்பினரோ, யார் குடித்தாலும் தவறுதானே? டாஸ்மாக் சரக்கைவிட கள்ளு கெடுதலான ஒன்றா? என்றும் கேள்விகளை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறாக கள்ளுக்கடையில்  பெண்கள் கும்பலாக உட்கார்ந்து கள்ளு குடித்த வீடியோ கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கள்ளு குடித்து களிப்படைந்த மாதுக்கள்- சொல்லு பிழைக்க வைத்த பொலிசார்SamugamMedia கேரளாவில் கள்ளு குடித்து வீடியோ வெளியிட்ட இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில், மதுபான கடைகள் இருப்பது போலக் கள்ளுக்கடைகளும் அமர்ந்து குடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு  இருக்கின்றன.இந்நிலையில், சமீபத்தில் கள்ளுக்கடை ஒன்றிற்கு இளம் பெண்கள் சிலர் சென்றுள்ளதுடன் அந்த பாருக்குள்ளேயே உட்கார்ந்து கள்ளு குடித்துள்ளனர். கள்ளு குடிக்கும் வீடியோவினை  அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட அவை  வைரலாகி, கேரளாவின்  சுங்கத்துறை அதிகாரிகளின் பார்வைக்கு சென்றுள்ளது. வீடியோவின் உதவியுடன் கள்ளு குடிக்கும் இளம் பெண்கள் குறித்து விசாரணையில் பொலிசார்  ஈடுபட  குறிப்பித்த கள்ளுக்கடையானது திருச்சூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குண்டேலிகடவு பகுதியில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்  கள்ளுக்கடையில் அமர்ந்து கள்ளு குடித்த பெண்களின் விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையின் போது அந்த இளம் பெண்கள், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலிக்காகவும், சோஷியல் மீடியாவில் ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதற்காகவும் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.கைதான பெண்களில் அஞ்சனா என்பவர்  திருமணமாகி கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் கணவர் ஃபாரினில் இருந்து வந்துவிட்டால், அதை கொண்டாடுவதற்காக தனது தோழிகளுக்கு கள்ளுக்கடையில் ட்ரீட் வைத்துள்ளாதாக கூறப்பட்டுள்ளது.அதன் போது  விளையாட்டாக,  கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்த அஞ்சனா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டால்  கைது வரை இந்த வீடியோ செல்லும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். எனினும், பெண்களை காவல்துறையினர் கைது செய்தநிலையில், அவர்களுக்கு அறிவுரை வழங்கிய உடனடியாக ஜாமீனில் விடுவித்துள்ளனர். கள்ளு குடிப்பதற்கெல்லாம் கைது தேவையா ஆண்களை ஏன் கைது செய்வதில்லை பெண் குடித்தாலும், ஆண் குடித்தாலும் ஒன்றுதானே ஏதோ ஒரு வகையில் பெண்களை அடிமைப்படுத்த நினைக்கிறீர்கள் என ஒருசாரார் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.மற்றொரு தரப்பினரோ, யார் குடித்தாலும் தவறுதானே டாஸ்மாக் சரக்கைவிட கள்ளு கெடுதலான ஒன்றா என்றும் கேள்விகளை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இவ்வாறாக கள்ளுக்கடையில்  பெண்கள் கும்பலாக உட்கார்ந்து கள்ளு குடித்த வீடியோ கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement