• Apr 26 2024

மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

Sharmi / Jan 30th 2023, 4:50 pm
image

Advertisement

அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் (30) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன், "ரகுபதி ராகவ ராஜாராம்" பாடல் பாடி மரியாதை செலுத்தப்பட்டது.

இதன்போது காந்திசேவா சங்கத்தின் தலைவரினால் காந்தி தொடர்பான சிறப்புரையும் நடைபெற்றது.




மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் (30) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன், "ரகுபதி ராகவ ராஜாராம்" பாடல் பாடி மரியாதை செலுத்தப்பட்டது.இதன்போது காந்திசேவா சங்கத்தின் தலைவரினால் காந்தி தொடர்பான சிறப்புரையும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement